அரசு ஓய்வூதியதாரர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு – மத்திய அரசு வெளியீடு!

0
அரசு ஓய்வூதியதாரர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு - மத்திய அரசு வெளியீடு!
அரசு ஓய்வூதியதாரர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு - மத்திய அரசு வெளியீடு!
அரசு ஓய்வூதியதாரர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு – மத்திய அரசு வெளியீடு!

பென்சன் பெறும் ஓய்வூதியர்களுக்கு மத்திய அரசு ஒரு முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி பென்சன் வாங்குவோரை குறிவைத்து சில மோசடி கும்பல்கள் செயல்பட்டு வருவதாக அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அரசு அறிவிப்பு:

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் பல்வேறு வகையான மோசடிகள் தலைதூக்கி உள்ளன. அந்த வரிசையில் பென்சன் வாங்கும் ஓய்வூதியர்களை குறிவைக்கும் மோசடி கும்பல் குறித்து மத்திய அரசு எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அவர்களால் பல ஓய்வூதியதாரர்கள் பணத்தையும் இழந்துள்ளனர்.

மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – நிதியமைச்சர் அதிரடி அறிவிப்பு!

இந்நிலையில் இந்த மோசடி கும்பலில் இருந்து எவ்வாறு தப்பிக்கலாம் என்பது குறித்து சில அறிவுரைகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. இது குறித்து பென்சன் மற்றும் பென்சனர் நலத்துறை ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஓய்வூதியர்கள் தங்களது விவரங்களை யாரிடமும் எந்த ஒரு முக்கிய தகவலையும் கேட்க கூடாது என்று தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, ஓய்வூதியர்களிடம் மொபைல் அல்லது இமெயில் மூலம் தொடர்பு கொண்டு OTP உள்ளிட்ட சுய விவரங்களை யாரேனும் கேட்டால், அவர்களிடம் எந்த ஒரு தகவல்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அவ்வாறு யாராவது தொந்தரவு கொடுத்தால் ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகளை 1800-11-1960 என்ற அதிகாரப்பூர்வ இலவச எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். OTP, Confirmation Code உள்ளிட்ட முக்கிய தகவல்களை தெரிந்து கொள்வதன் மூலம் மோசடி கும்பல்கள் பென்சன் பணத்தை கொள்ளை அடிக்கின்றனர். எனவே ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி OTP உள்ளிட்ட முக்கிய விவரங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என அரசு அறிவித்துள்ளது. மோசடி கும்பல்கள் விடுக்கும் அழைப்புகள், இ-மெயில், SMS போன்றவற்றை நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!