HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – SMS மூலம் மோசடி! கவனம் தேவை!

0
HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - SMS மூலம் மோசடி! கவனம் தேவை!
HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - SMS மூலம் மோசடி! கவனம் தேவை!
HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – SMS மூலம் மோசடி! கவனம் தேவை!

இந்தியாவில் வங்கி கணக்கில் இருந்து பணம் கையாடுதல் போன்ற மோசடிகள் அதிகம் நடைபெற்று வருகிறது. இது குறித்து வங்கிகளும் எச்சரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி வங்கி பெயரில் மோசடிகள் அரங்கேறி வருகிறது.

மோசடி:

இந்தியாவில் வங்கி சேவை என்பது மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக உள்ளது. அதனால் கடந்த மாதம் நிலவிய ஊரடங்கு காலத்திலும் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் பகுதி நேரமாக இயக்கப்பட்டது. மேலும் கொரோனா பரவும் நேரத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வங்கிகள் இணையதளம் வாயிலாக பணபரிவர்த்தனை ரகளை மேற்கொள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறித்தியது. அதனால் தற்போது ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் அதிகமாகிவிட்டது. இந்த நிலையில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை பயன்படுத்தி மோசடி செய்யும் நபர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பான் கார்டு பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

அந்த வகையில் தற்போது ஹெச்டிஎப்சி வங்கி பெயரில் மோசடி நடந்து வருகிறது. அன்பார்ந்த ஹெச்டிஎப்சி வாடிக்கையாளரே, உங்கள் ஹெச்டிஎப்சி வங்கி கணக்கின் நெட் பேங்கிங் சேவை இன்று முடக்கப்பட்டு உள்ளது. குறுஞ்செய்தியை உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்து பான் கார்டு-ஐ உடனடியாக அப்டேட் செய்யுங்கள் என்று போலியான எஸ்எம்எஸ் ஒன்றை மோசடி கும்பல் அனுப்பியுள்ளனர். மேலும் இந்த எஸ்எம்எஸ் 76058-35257 என்ற எண்ணில் இருந்து வந்துள்ளது.

நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 14 பேருக்கு ‘தயான் சந்த் கேல் ரத்னா’ விருது – குடியரசுத் தலைவர் வழங்கல்!

இது குறித்து ஹெச்டிஎப்சி வங்கி தனது அதிகார்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. மேலும் பொதுவாக எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்அப்-ல் வரும் எந்த ஒரு வெப்சைட் லிங்க்-ஐயும் கிளிக் செய்யக் கூடாது. அனுப்பியது யார்..? இணைய முகவரி சரியாகப் பெயருடன் உள்ளதா என்ற குறியீடு உள்ளதா? என்பதைக் கட்டாயம் கவனிக்க வேண்டும். இதுபோன்ற எஸ்எம்எஸ் குறுஞ்செய்திகளில் வரும் மோசடி தகவல்களில் இருக்கும் வார்த்தைகளைக் கவனித்தாலே மோசடியாளர்களைக் கண்டுபிடித்து விட முடியும் என்று வங்கி அறிவுறுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!