செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர விரும்புவோர் கவனத்திற்கு – புதிய நன்மைகள் அறிமுகம்!

0
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர விரும்புவோர் கவனத்திற்கு - புதிய நன்மைகள் அறிமுகம்!
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர விரும்புவோர் கவனத்திற்கு - புதிய நன்மைகள் அறிமுகம்!
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர விரும்புவோர் கவனத்திற்கு – புதிய நன்மைகள் அறிமுகம்!

பெண் குழந்தைகளுக்கு பல சிறப்பான நலத்திட்டங்களை அஞ்சலகம் வழங்கி வரும் நிலையில், செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர விரும்புபவர்களுக்கு என்னென்ன நன்மைகள் இத்திட்டத்தின் மூலமாக கிடைக்கிறது என்பது குறித்தான முழு தகவலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

செல்வமகள் சேமிப்பு திட்டம்:

இந்தியாவில் பலதரப்பட்ட சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது. அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு மற்றும் பாதுகாப்பான சேமிப்பு திட்டம் என்றால் அது செல்வமகள் சேமிப்பு திட்டம் தான் முன்னிலையில் உள்ளது. மேலும், அதிக வட்டி தரும் திட்டமாகவும் இது இருப்பதால் பலரும் இந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த திட்டத்தின் மூலமாக பெண் குழந்தைகளுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பார்க்கலாம். மேலும், தமிழகத்தில் மட்டுமே கிட்டத்தட்ட செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் வாயிலாக 26.03 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக, ஒரே குடும்பத்தில் உள்ள இரண்டு குழந்தைகளுக்குமே இந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இணைந்து முதலீடு செய்யலாம்.

Exams Daily Mobile App Download

மேலும், கணக்கை முடிக்கும் போது மூன்று மடங்கு தொகை கிடைக்கும் என்பதால் பெற்றோர்கள் அதிகமாக செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர். அதாவது, செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர விரும்புபவர்கள் பெண் குழந்தைகளின் பெயர் மற்றும் பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், குறைந்தபட்சமாக ரூ.250 லிருந்து ஒன்றரை லட்சம் வரையிலும் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடங்கியபோது 9.1 சதவீத வட்டி வீதம் வழங்கப்பட்டிருக்கிறது. பின்னர் அவ்வப்போது இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்து தற்போது 7.6 சதவீத வட்டி தான் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு – கொரோனா பரவல் எதிரொலி!

இந்த திட்டத்தில் சேர்ந்த பெற்றோர்கள் குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தியடைந்த பிறகு திருமணம் அல்லது உயர் கல்விக்காக பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, திருமணத்திற்காக பணத்தை எடுக்க விரும்புபவர்கள் முழு பணத்தையும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், குழந்தைகளின் உயர்கல்விக்காக பணத்தை எடுக்க விரும்புபவர்கள் 50 சதவீத பணத்தை மட்டுமே எடுக்க முடியும். ஒருவேளை அந்த குழந்தை திடீரென இறந்து விட்டால் கணக்கு முடிக்கப்பட்டு அதற்குரிய உரிய பணத்தை பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த குழந்தையின் பெற்றோர் பாதியிலேயே இறந்துவிட்டால் குழந்தையின் பாதுகாவலர் தொடர்ந்து முதலீடு செய்ய விரும்பினாலும் முதலீடு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here