தமிழக அரசின் ரேஷன் கார்டு பெற விரும்புவோர் கவனத்திற்கு – ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

0
தமிழக அரசின் ரேஷன் கார்டு பெற விரும்புவோர் கவனத்திற்கு - ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
தமிழக அரசின் ரேஷன் கார்டு பெற விரும்புவோர் கவனத்திற்கு - ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
தமிழக அரசின் ரேஷன் கார்டு பெற விரும்புவோர் கவனத்திற்கு – ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

இந்தியாவில் முக்கிய ஆவணங்களில் ஒன்றான ரேஷன் கார்டுக்கு ஆன்லைன் மூலம் எளிதாக விண்ணப்பிக்கலாம். தற்போது அதற்கான எளிய வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

ரேஷன் கார்டு:

இந்தியாவில் ரேஷன் கார்டுகள் மூலம் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை அரசு வழங்கி வருகிறது. கடந்த ஊரடங்கு மாதங்களில் கொரோனா பேரிடர் காலத்தில் அனைத்து மாநில அரசுகளும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கிய நிவாரணங்களை பெற்று மக்கள் பயனடைந்தனர். குடும்ப அட்டைதாரரின் வருமானத்தைப் பொறுத்து ரேஷன் அட்டைகளின் தரநிலை 5 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்களை மனதில் கொண்டு ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் கொண்டுவரப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் அதே மாநிலத்தில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் மீண்டும் கர்ப்பமாகும் கண்ணம்மா? அடுத்தகட்ட கதைக்களம்!

முதலில் புதிய ரேஷன் கார்டு பெற அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு அதிக கால வியரமும் ஆகும். தற்போது எளிதாக வீட்டில் இருந்த படியே உரிய ஆவணங்களை கொண்டு ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும். மேலும் ரேஷன் கார்டை மாற்றுதல், ஏதேனும் விவரங்களை மாற்றுதல் போன்ற வேலைகளையும் ஆன்லைன் மூலமாக செய்யலாம். மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் ரேஷன் கார்டுகள் மூலம் மக்கள் பயனடைந்து வருகின்றனர். கடந்த வருடம் முதல் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்கும் முறைகள்:

 • https://www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் ஸ்மார்ட் கார்டு ஆப்ஷனைக் கிளிக் செய்ய வேண்டும்.
 • அதில் ஒரு படிவம் திரையில் தோன்றும். அதை நீங்கள் முழுமையாக வேண்டும்.
 • அனைத்து தகவல்களையும் நிரப்பிய பின்னர் உங்கள் நீங்கள் அனைத்து ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.
 • அடுத்ததாக குடும்ப உறுப்பினர்கள் விவரம், எரிவாயு இணைப்பு விவரம் போன்றவைகளை பதிவிட வேண்டும்
 • உங்களுக்கு ஒரு Reference எண் கிடைக்கும், அதை குறித்து வைத்து ரேஷன் கார்டு குறித்த விவரங்களை அறியலாம்.
 • உங்களின் விண்ணப்பத்தை அதிகாரிகள் சரிபார்ப்பார்கள். சரிபார்ப்பு முடிந்ததும், உங்கள் ரேஷன் கார்டு உங்கள் வீட்டில் டெலிவரி செய்யப்படும்.

  Velaivaippu Seithigal 2021

  To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
  To Join => Whatsapp கிளிக் செய்யவும்
  To Join => Facebookகிளக் செய்யவும்
  To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!