திருமலை திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – பரிணயோத்சவம் தொடக்கம்!
கொரோனா கட்டுப்பாடுகளால் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் பரிணயோத்சவம் நடைபெறவில்லை. நடப்பு ஆண்டு நோய் தொற்று தாக்கம் குறைந்து கட்டுப்பாடுகள் விலக்கப் பட்டு உள்ளதால், நேற்று முதல் கல்யாண உற்சவம் தொடங்கி உள்ளது.
கல்யாண உற்சவ வைபவம்:
இந்தியாவின் புனிதத் தலங்களில் முக்கியமான தளமாக திருமலை திருப்பதி உள்ளன. தினந்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்கள் ஆலயத்துக்கு வந்து தரிசனம் செய்யப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. தற்போது கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதால் அந்தக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
திருப்பதியில் பிரம்மோற்சவம், ராமநவமி, யுகாதி, ஜன்மாஷ்டமி, தெப்போத்சவம், அனுமத் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி போன்ற பல உற்சவங்கள் சிறப்புடன் நடைபெறும். அவற்றில் முக்கிய உற்சவமாக பரிணயோத்சவம் நடைபெறுகிறது. பத்மாவதி பரிணயோத்சவம் விழா(கல்யாண உற்சவம்) மூன்று நாட்கள் திருமலையில் நாராயணகிரி வனத்தில் நடைபெறும். பெருமாள் ஶ்ரீநிவாசனாக அவதரித்து ஆகாசராஜனின் புதல்வியான பத்மாவதியைத் திருமணம் செய்துகொண்ட வைபவத்தை கொண்டாடும் விதமாக இந்த மூன்று நாள் கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது.
Degree முடித்தவர்களுக்கு வங்கியில் வேலைவாய்ப்பு – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!
கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்ததால், பரிணயோத்சவம் உற்சவம் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டிருப்பதால் நேற்று முதல் இந்த வைபவம் தொடங்கி வரும் 12 ம் தேதி வரை நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வைபவத்தை தரிசனம் செய்தால் திருமணத்தடை உள்ளவர்களுக்கு தடைகள் நீங்கும். விரைவில் திருமண வரம் கிடைக்கும் என்பது ஐதீகம் ஆகும். இந்த நிகழ்வுக்காக நாராயணகிரி வனத்தில் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த உற்சவத்தை காண ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள். இருப்பினும் இந்த உற்சவம் நடைபெறுகிற மூன்று நாட்களும் ஆர்ஜித சேவை மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகிய சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.