திருப்பதி செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – ஆன்லைன் மூலமாக அங்க பிரதட்சண டிக்கெட்!

0
திருப்பதி செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு - ஆன்லைன் மூலமாக அங்க பிரதட்சண டிக்கெட்!
திருப்பதி செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு - ஆன்லைன் மூலமாக அங்க பிரதட்சண டிக்கெட்!
திருப்பதி செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – ஆன்லைன் மூலமாக அங்க பிரதட்சண டிக்கெட்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது நேரடி இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கு ஆன்லைன் முறையில் டோக்கன் வழங்க உள்ளதாக தேவஸ்தானம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

திருப்பதி:

ஆந்திர மாநிலத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சுவாமி ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். அதனால் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இலவச நேரடி தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டது. அத்துடன் ரூ.300 சிறப்பு கட்டணம் செலுத்தி சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் மத்திய அரசு கடந்த மார்ச் மாதத்தில் அனைத்து கட்டுப்பாடுகளையும் திரும்ப பெறுவதாக அறிவித்தது.

TN Job “FB  Group” Join Now

அதன்படி தற்போது இலவச நேரடி தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் தற்போது கோடைகாலம் என்பதால் பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இதையடுத்து தற்போது அங்கப்பிரதட்சணம் செய்வதற்கு நேரடி முறையில் டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவதால் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று காத்திருந்து டோக்கன்களை பெற வேண்டிய நிலை இருந்தது.

தமிழக 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பாடத்திட்டம் குறித்து கல்வித் துறையின் அறிவிப்பு!

அதனால் இதனை தவிர்க்கும் வகையில் தேவஸ்தானம் பக்தர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் வெளியிட்டுள்ளதாவது, திருப்பதியில் அங்கப்பிரதட்சணம் டோக்கன்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்ய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இனிமேல் பக்தர்கள் வரிசையில் நின்று கொண்டு காத்திருக்க தேவையில்லை. அதன்படி இந்த டோக்கன்கள் (ஜூன் 15) நாளை காலை 10 மணிக்கு மற்றும் ஜூன் 16ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை என நாள் ஒன்றுக்கு 750 டோக்கன்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் https://tirupatibalaji.ap.gov.in என்ற தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அங்கப்பிரதட்சண டோக்கன்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!