தங்க நகைக்கடன் வாங்க இருப்போர் கவனத்திற்கு – புதிதாக ஏர்டெல் பேமென்ட் திட்டம் அறிமுகம்!

0
தங்க நகைக்கடன் வாங்க இருப்போர் கவனத்திற்கு - புதிதாக ஏர்டெல் பேமென்ட் திட்டம் அறிமுகம்!
தங்க நகைக்கடன் வாங்க இருப்போர் கவனத்திற்கு - புதிதாக ஏர்டெல் பேமென்ட் திட்டம் அறிமுகம்!
தங்க நகைக்கடன் வாங்க இருப்போர் கவனத்திற்கு – புதிதாக ஏர்டெல் பேமென்ட் திட்டம் அறிமுகம்!

தங்க நகைகளுக்கான லோன் கொடுக்கும் திட்டத்தை முத்தூட் பைனான்ஸ் வங்கி தற்போது அறிமுகம் செய்துள்ளது. குறைந்தது மூவாயிரம் முதல் அந்த நகைக்கு ஈடான பணத்தை லோனாக பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நகை கடன்:

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் தங்கத்தில் முதலீடு செய்வதைத் தான் பாதுகாப்பான திட்டமாகவும், புத்திசாலித்தனமான திட்டமாகவும் நம் தாய்மார்கள் எண்ணுகின்றனர். மேலும், இந்த தங்க நகைகளுக்கு குறைந்த வட்டியில் தனியார், அரசு வங்கிகள், தனியார் நிறுவனங்களும் மக்களுக்கு லோன் தந்து கொண்டிருக்கின்றனர். ஏர்டெல் பேமென்ட் வங்கியின் மூலமாக தற்போது முத்தூட் ஃபைனான்ஸ் தங்க நகைகளுக்கான லோனை கொடுக்க திட்டமிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த தங்க நகை கடனுக்கு செயலாக்க கட்டணம் எதுவும் கிடையாது எனவும், முத்தூட் பைனான்ஸ் அடகு வைக்கப்பட்ட தங்க மதிப்பில் இருந்து 75% வரைக்கும் கடனாக வழங்கும் எனவும் ஏர்டெல் பேமென்ட் வங்கி அறிவித்துள்ளது. தங்க நகை கடன்கள் மட்டுமல்லாமல் தனிநபர் முதல் தொழில்முறை வரையிலான அனைவருக்குமே சிறந்த லோன் திட்டத்தை ஏர்டெல் முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் வழங்கி வருகிறது. தங்க நகைகள் மூலமாக கடன்களை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலான பாதுகாப்பு மற்றும் மலிவு விலையில் வட்டி விகிதத்துடன் கொடுப்பதில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் மகிழ்ச்சி அடைவதாக, இணை நிர்வாக இயக்குனர் அலெக்ஸாண்டர் ஜார்ஜ் முத்தூட் அறிவித்துள்ளார்.

Degree முடித்தவர்களுக்கு Amazon நிறுவன வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன்..!

மேலும் குறைந்தபட்சமாக 3000 ரூபாயிலிருந்து முத்தூட் பைனான்ஸ் வங்கியின் மூலமாக நகை கடன் பெற்றுக் கொள்ளலாம். அதிகபட்சமாக தங்கத்தின் மதிப்பு எவ்வளவு என்பதை பார்த்து அதில் 75% வரைக்கும் நகை கடனாகப் பெற்றுக் கொள்ளலாம். தவணை முறையிலும் அந்த கடனை திருப்பி கொடுக்கும் வசதியை முத்தூட் பைனான்ஸ் வங்கி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here