ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய திட்டமிடுவோர் கவனத்திற்கு – IRCTC புதிய வசதி!

0
ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய திட்டமிடுவோர் கவனத்திற்கு - IRCTC புதிய வசதி!
ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய திட்டமிடுவோர் கவனத்திற்கு – IRCTC புதிய வசதி!

IRCTC சமீப காலமாக பயணிகளுக்கு வசதியாக புதிய சலுகைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் முன்பதிவு செய்பவர்களுக்கு மொபைல் நம்பர் சேவை அறிமுகம் செய்துள்ளது. தற்போது எந்தெந்த சேவையை பெற எந்த எண்ணை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து ட்விட் செய்து உள்ளது.

புதிய வசதி:

கொரோனா காலகட்டத்தில் அமலில் இருந்த பொது முடக்கம் காரணமாக ரயில் சேவைகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்த வகையில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். இதனால் அதிகமான ரயில் பயணிகள் பாதிக்கப்பட்டனர். மேலும் ரயில் போக்குவரத்து சேவை மிகவும் குறைவான விலையில், சாமானிய மக்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தாக்கம் குறைந்து அனைத்து வகையான ரயில் சேவைகளும் தொடங்கப்பட்டு உள்ளது. அதன்படி ரயிலில் தற்போது முன்பதிவில்லா சேவையை பயன்படுத்தி கொள்ள மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

ரூ.75,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

Indian Railway Catering and Tourism Corporation இந்திய இரயில்வேயின் துணை நிறுவனமாக தொடர்வண்டிப் பயணிகளுக்கு உணவு வழங்கல், சுற்றுலா மேலாண்மை மற்றும் இணையவழி பயணச்சீட்டுப் பதிவு ஆகிய சேவைகளை மேற்கொள்கிறது. இந்த நிலையில் IRCTC ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு வசதியான வழியை வெளியிட்டுள்ளது. மேலும் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவை ஊக்குவிக்கும் வகையில் IRCTC பல சலுகைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பயணிகள் இந்திய ரயில்வே தொடர்பான எந்த தகவலையும் ஒரே ஒரு நம்பர் மூலம் பெறலாம். ரயில் பயணத்தின் போது ஏதேனும் தகவல் அல்லது புகார்களுக்கு 139 என்ற ஹெல்ப்லைன் நம்பரை தொடர்பு கொள்ளலாம் என IRCTC சமீபத்தில் ட்வீட் செய்து உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (ஏப்ரல் 5) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இந்த ஹெல்ப்லைன் நம்பர் 139க்கு அழைப்பதன் மூலம், பாதுகாப்பு, மருத்துவ உதவி, விபத்து பற்றிய தகவல்களை பெறலாம். இது மட்டுமல்லாமல் ரயில், ரயில் நிலையம் தொடர்பான புகார்கள், விஜிலென்ஸ் தகவல், பார்சல் விசாரணை, பொதுத் தகவல், புகார் நடவடிக்கை நிலை போன்ற வசதிகளும் இதில் கிடைக்கும். இந்த ஹெல்ப்லைன் எண் பதிவுசெய்யப்பட்ட குரல் பதில் அமைப்பை அடிப்படையாகக் கொண்டது. இதில், ரயில் பயணிகள் பல்வேறு மொழிகளில் தகவல்களைப் பெற முடியும்.மேலும் ரயில்கள் மற்றும் PNR நிலை, ரயில் வருகை, புறப்பாடு, டிக்கெட் கிடைப்பது, முன்பதிவு தொடர்பான தகவல்களைப் பெற, 139 என்ற ஹெல்ப்லைன் எண்ணுக்கு பயணிகள் SMS அனுப்பலாம் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!