சென்னை மாநகர பொதுமக்கள் கவனத்திற்கு – முகக்கவசம் கட்டாயம்!

0
சென்னை மாநகர பொதுமக்கள் கவனத்திற்கு - முகக்கவசம் கட்டாயம்!
சென்னை மாநகர பொதுமக்கள் கவனத்திற்கு - முகக்கவசம் கட்டாயம்!
சென்னை மாநகர பொதுமக்கள் கவனத்திற்கு – முகக்கவசம் கட்டாயம்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் தினசரி பாதிப்பு அதிகரித்ததை அடுத்து பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அறிக்கை ஒன்றை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு:

கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து மக்கள் தங்களது இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் வழக்கம் போல வகுப்புகளுக்கு சென்று வருகின்றனர். இந்த சூழ்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் நாடு முழுவதும் பல மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் மாநகராட்சி சார்பில் புதிய அறிக்கை ஒன்று வெளியாகி இருக்கிறது.

Exams Daily Mobile App Download

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் 306 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் நேற்று நிலவரப்படி 1,697 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். கொரோனாவில் இருந்து பொது மக்கள் பாதுகாத்துக் கொள்ள முகக்கவசம் அணிவது கட்டாயமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான பயணிகள் கவனத்திற்கு – கட்டணம் உயர்வு அறிவிப்பு! அதிர்ச்சியில் மக்கள்!

சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல், இருமல், தொண்டை வலி மற்றும் சளி போன்ற கொரோனா அறிகுறிகள் இருந்தால் அந்த நபர்கள் குறித்த விவரங்களை தெரியப்படுத்த வேண்டும் என கடிதம் மூலமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 448 தனியார் மருத்துவமனைகள் மற்றும் பொது சிகிச்சை செய்யும் மையங்களின் சார்பில் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் முதல் தவணை செலுத்திக் கொண்டு இரண்டாம் தவணை செலுத்தாமல் இருப்பவர்கள் விரைவில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சமுதாய நல மையங்களை அணுகி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here