தமிழக ரயில் பயணிகளின் கவனத்திற்கு – போராட்ட எதிரொலி! ரயில்கள் ரத்து!

0
தமிழக ரயில் பயணிகளின் கவனத்திற்கு - போராட்ட எதிரொலி! ரயில்கள் ரத்து!
தமிழக ரயில் பயணிகளின் கவனத்திற்கு - போராட்ட எதிரொலி! ரயில்கள் ரத்து!

தமிழக ரயில் பயணிகளின் கவனத்திற்கு – போராட்ட எதிரொலி! ரயில்கள் ரத்து!

பீகார், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் பீகார் கிழக்கு உத்தரப் பிரதேசத்துக்கு இயக்கப்படும் அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில் சேவைகள் நிறுத்தம்:

இந்திய இராணுவத்தின் முப்படைகளில் தற்காலிக மற்றும் நிரந்தர அடிப்படையில் ராணுவ வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். தற்காலிக அடிப்படையில் தேர்வு செய்யப்படும் ராணுவ வீரர்கள் 10 ஆண்டுகள் வரை இந்த முப்படைகளில் பணியாற்றலாம் மற்றும் நிரந்தர அடிப்படையில் தேர்வு செய்யப்படும் ராணுவ வீரர்கள் ஓய்வு பெறும் வயது வரைக்கும் பணிபுரிய முடியும். மேலும், தற்காலிக அடிப்படையில் வேலை செய்யும் ராணுவ வீரர்கள் தங்களது பணி காலம் முடிவடையும் சமயத்தில் விரும்பினால் நான்கு ஆண்டுகள் கூடுதலாக பணி நீட்டிப்பு பெற்றுக்கொள்ளலாம்.

இந்நிலையில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் கடந்த ஜூன் 14-ஆம் தேதி ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்கான புதிய திட்டத்தை அறிமுகம் செய்தார். அக்னிபாத் என்னும் இந்த புதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பீகாரின் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயிலுக்கு இளைஞர்கள் சிலர் தீ வைத்து கொளுத்தினர். மேலும் பல இடங்களில் ரயில் தண்டவாளங்களை நொறுக்கியும், நெடுஞ்சாலைகளிலும் டயரை எரித்தும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தினர்.

இளைஞர்களின் இந்த போராட்டத்தால் பீகார் மாநிலம் முழுக்க பதட்டமான சூழல் நிலவியுள்ளது. இந்த மாநிலங்களை தொடர்ந்து ராஜஸ்தான், உத்திரபிரதேசம், ஹரியானா, ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் உள்ள இளைஞர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தியும், போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திக் கொண்டும் பதட்டமான நிலையை உருவாக்கி வருகின்றனர். இதனால் பயணிகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் தெற்கு ரயில்வே பீகார் கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் இருந்து இயக்கப்படும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கலவரம் முடியும் வரைக்கும் இந்த ரயில்கள் இயங்காது எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!