தமிழக 12ம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு – ‘இந்த’ கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண்! தேர்வுத்துறை அறிவிப்பு!

0
தமிழக 12ம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு - 'இந்த' கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண்! தேர்வுத்துறை அறிவிப்பு!
தமிழக 12ம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு - 'இந்த' கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண்! தேர்வுத்துறை அறிவிப்பு!
தமிழக 12ம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு – ‘இந்த’ கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண்! தேர்வுத்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் இந்த ஆண்டு கட்டாயமான முறையில் பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தபடி, தற்போது உயர்கல்வி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிவடைந்துள்ளது. இதையடுத்து தற்போது 12ம் வகுப்பு வேதியியல் பொதுத்தேர்வில் சில கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் தருவதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

போனஸ் மதிப்பெண்கள்

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. இதையடுத்து இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு தாமதமாக கல்வியாண்டு தொடங்கப்பட்டது. அதனால் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டது. மேலும் பொதுத்தேர்வுக்கான பாடங்களை நடத்தி முடிக்க வாரத்தில் சனிக்கிழமை உட்பட 6 நாட்கள் வகுப்புகள் நடத்தப்பட்டன. இதையடுத்து பொது தேர்வுக்கான கால அட்டவணையும் பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டது.

Exams Daily Mobile App Download

இதில் தெரிவிக்கப்பட்டிருந்தாவது, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் என்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதே போல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்பட்டது. அதன்படி தற்போது 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த இடையூறுமின்றி அறிவித்தபடி தேர்வு நடந்து முடிவடைந்துள்ளது. அத்துடன் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்றுடன் பொதுத்தேர்வு முடிவடைய உள்ளது.

தமிழக பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு – அரசு தேர்வுத்துறை அதிரடி உத்தரவு!

இதையடுத்து பொதுத்தேர்வுக்கான முடிவுகளை விரைவில் வெளியிட வேண்டும் என்று விடைத்தாள் திருத்தும் பணிகளை நாளை (ஜூன் 1) முதல் தொடங்க உள்ளது. மேலும் பொதுத்தேர்வில் ஏதேனும் வினாக்கள் தவறானதாக கேட்கப்பட்டிருப்பின் அதற்கு போனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படும். அதன்படி 12ம் வகுப்பு வேதியியல் பாடப்பிரிவில் சில கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண்கள் வழங்க உள்ளதாக தேர்வுத்துறை இயக்ககம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், வேதியியல் பாடத்தில் பகுதி 1ல் கேள்வி எண் 5 அல்லது 9-ஐ எழுதிய மாணவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும் என்றும் பகுதி 2ல் கேள்வி எண் 29-ஐ எழுதிய மாணவர்களுக்கும் முழு மதிப்பெண் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!