தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – பேச்சுப்போட்டி அறிவிப்பு!

0
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு - பேச்சுப்போட்டி அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு - பேச்சுப்போட்டி அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – பேச்சுப்போட்டி அறிவிப்பு!

டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் ஏப்ரல் 14 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது. போட்டியில் தேர்வானவர்களுக்கு பல சிறப்பு பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பேச்சுப்போட்டி:

இந்தியா முழுவதும் வாழும் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்காக குரல் எழுப்பியவர் தான் டாக்டர் அம்பேத்கர். மேலும், ஒதுக்கப்பட்ட மக்களுக்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கினார். ஒவ்வொரு ஆண்டும் அம்பேத்கர் பிறந்தநாளை அரசு விமர்சையாக கொண்டாடி வருகிறது. இதுமட்டுமல்லாமல் அனைத்து பள்ளிகளிலுமே அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். தற்போது இந்தாண்டு அம்பேத்காருக்கு 131 ஆவது பிறந்தநாள் கொண்டாட இருப்பதால் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது.

ஏப்ரல் 7 வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல் – மாநில அரசின் அதிரடி உத்தரவு!

அதாவது தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்த தலைப்பில் பேச்சுப்போட்டி நடைபெறும் என்பதை ஏப்ரல் 19 ஆம் தேதி தான் அறிவிக்கப்படும் எனவும், அதே நாளில் பேச்சுப்போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், பேச்சுப்போட்டி காலை 10 மணியில் இருந்து பிற்பகல் 2 மணிக்குள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) 2.75% உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!

பேச்சுப்போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் அந்தெந்த பள்ளி மற்றும் கல்லூரி முதல்வரிடம் அனுமதி கடிதம் பெற்று வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.5000 பரிசு தொகையும், இரண்டாம் பரிசு ரூ.3,000 பரிசு தொகையும், மூன்றாம் பரிசு ரூ.2,000 பரிசு தொகையும் மற்றும் சான்றிதழும் வழங்கப்படும். மேலும், அரசு பள்ளிகள் சார்பில் கலந்துகொள்ளும் இரண்டு மாணவர்களுக்கு சிறப்பு பரிசாக தலா இரண்டாயிரம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!