
உயர்கல்வி பயிலும் மாணவர்களின் கவனத்திற்கு – இனி ‘இதை’ செய்ய வேண்டாம்.. UGC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
இந்தியாவில் தற்போது புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வியில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது PhD படிப்பில் தற்போது புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்து UGC முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
PhD படிப்பு:
இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் கல்வி என்பது ஆன்லைன் மையமாகி விட்டது. எங்கு பார்த்தாலும் மாணவர்கள் வீட்டில் இருந்த படியே பாடங்களை கற்று வருகின்றனர். அது மட்டுமில்லாமல் தேர்வு முறைகளும் மாற்றப்பட்டுள்ளது. கடந்த வருடம் பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாமலேயே மதிப்பிட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து தற்போது புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் உயர் கல்வித்துறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு வருகிறது.
இந்த புதிய கல்வி கொள்கையின் படி மாணவர்களுக்கு 4 ஆண்டு கால இளநிலை படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த 4 ஆண்டு கால படிப்பினை மாணவர்கள் நேரடியாகவும் ஆன்லைன் வழியாகவும் படிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 4 ஆண்டு இளநிலை படிப்பு முடித்தவர்கள் நேரடியாக பிஎச்.டி. படிப்பில் சேரலாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது PhD படிப்பில் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழக விரிவுரையாளர் பணி நியமன ஆணை – முதல்வர் வழங்கல்!
Exams Daily Mobile App Download
அதாவது PhD பயிலும் மாணவர்கள் தங்களின் கட்டுரைகளை முன்னணி ஆய்வு இதழ்களில் பிரசுரிக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்து வந்தது. தற்போது இந்த முறை மாற்றபட்டுள்ளது. அதன்படி இனி PhD பயிலக்கூடிய மாணவர்கள் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை ஆய்விதழ்களில் பிரசுரிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. பெரும்பாலான PhD மாணவர்கள் தரமான ஆய்வு இதழ்களில் தங்கள் கட்டுரைகளை சமர்ப்பிப்பதில்லை என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்