1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – மாநில வாரியாக கோடை விடுமுறை விபரங்கள்!

0
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - மாநில வாரியாக கோடை விடுமுறை விபரங்கள்!
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - மாநில வாரியாக கோடை விடுமுறை விபரங்கள்!
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – மாநில வாரியாக கோடை விடுமுறை விபரங்கள்!

தற்போது பல்வேறு மாநிலங்களில் நிலவும் வெப்பச் சலனம் காரணமாக பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை மாநில அரசுகள் அறிவிக்கத் தொடங்கியுள்ளன. அதன்படி, மாநில அரசு அறிவித்துள்ள விடுமுறை பட்டியலை இப்பதிவில் பார்க்கலாம்.

கோடை விடுமுறை

கடும் வெயிலின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறைக்கான தேதியை மாநில அரசுகள் அறிவிக்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் கொரோனா பேரலைத்தொற்று காரணமாக இரண்டு வருட இடையூறுக்குப் பிறகு 2022ம் ஆண்டில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது மக்கள் கடுமையான வெப்ப அலை சிக்கலை சந்தித்து வருகின்றனர். இருப்பினும் ஒரு சில மாநிலங்களில், கொரோனா தொற்றுநோய் காரணமாக கல்வியில் இடையூறு ஏற்பட்டதால் இழந்த நேரத்தை ஈடுசெய்ய இந்த ஆண்டு கோடை விடுமுறை குறைக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Downloadc

இதற்கிடையில், 2021-22ம் கல்வியாண்டுக்கான இறுதித் தேர்வுகளை மே மாத இறுதிக்குள் முடிக்க சில மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இப்போது மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் முதல் மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேசம் வரையிலான பல மாநிலங்கள் 2022ம் ஆண்டு கோடை விடுமுறைக்கான தேதிகளை அறிவித்துள்ளன. இது பற்றிய முழு விவரங்களையும் காண்போம்.

மேற்கு வங்கம்: மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மே 2ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போபால்: போபாலில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் ஏப்ரல் 29 முதல் வகுப்புகளை முடிக்க முடிவு செய்துள்ளன.

புதுச்சேரி: புதுச்சேரியில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 30ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ராதிகா பேச்சை கேட்டு பாக்கியாவை சமாதானம் செய்யும் கோபி – சீரியலில் அடுத்து வரப்போகும் திருப்பம்!

உத்தரபிரதேசம்: மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கோடை விடுமுறை மே 21 முதல் ஜூன் 30 வரை தொடரும்.

சத்தீஸ்கர்: இந்த ஆண்டுக்கான கோடை விடுமுறை ஏப்ரல் 24ம் தேதி தொடங்கி ஜூன் 14ம் தேதி முடிவடையும் என்று சத்தீஸ்கர் மாநில பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஒடிசா: ஒடிசாவில் உள்ள பள்ளிகளுக்கான கோடை விடுமுறை இந்த ஆண்டு 35 நாட்கள் குறைக்கப்பட்டு ஜூன் 6 முதல் ஜூன் 16 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மாநிலத்தில் நிலவும் வெப்பநிலை காரணமாக, ஏப்ரல் 26 முதல் ஏப்ரல் 30 வரை அனைத்து மாணவர்களுக்கும் ஐந்து நாட்களுக்கு வகுப்புகள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா பள்ளிகளுக்கான கோடை விடுமுறை மே 2 முதல் ஜூன் 12 வரை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கர்நாடகா: கர்நாடகாவில் கோடை விடுமுறைகள் தற்போது துவங்கியுள்ளன.

ஆந்திரா: மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இந்த ஆண்டு மே 6 முதல் ஜூலை 4 வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!