1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – மாநில வாரியான கோடை விடுமுறை விவரங்கள் இதோ!

0
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - மாநில வாரியான கோடை விடுமுறை விவரங்கள் இதோ!
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - மாநில வாரியான கோடை விடுமுறை விவரங்கள் இதோ!
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – மாநில வாரியான கோடை விடுமுறை விவரங்கள் இதோ!

தற்போது உத்தரப்பிரதேச மாநிலம் முதல் மகாராஷ்டிரா வரையுள்ள பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி மாநில வாரியான கோடை விடுமுறை குறித்த முழு பட்டியலும் இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறை

கொரோனா தொற்றுநோய் காரணமாக ஏற்பட்ட 2 வருட இடைவெளிக்குப் பிறகு 2022ல் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் மேற்கு வங்காளம் போன்ற பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக கோடை விடுமுறையை அரசுகள் முன்கூட்டியே அறிவித்துள்ளது. இது தவிர சில மாநிலங்களில், கொரோனாவால் ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடுசெய்யும் வகையில் இந்த ஆண்டுக்கான கோடை விடுமுறை குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

கோடை விடுமுறையை அறிவித்துள்ள மாநிலங்களின் பட்டியல் இதோ:

மேற்கு வங்கம்: முதல்வர் மம்தா பானர்ஜியின் அறிவுரையை தொடர்ந்து, கோடை விடுமுறை மே 2 முதல் துவங்கி ஜூன் 15ம் தேதி வரை தொடரும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக வெளியான விடுமுறை பட்டியலின்படி, மே 12 முதல் 24 வரை கோடை விடுமுறை அளிக்க திட்டமிடப்பட்டது.

உத்தரபிரதேசம்: உத்தரபிரதேசத்தில் மே 21ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை 51 நாட்கள் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா அரசு 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 2 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறையை அறிவித்து ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அந்த வகையில் விதர்பாவைத் தவிர, மாநிலத்தில் அடுத்த கல்வி அமர்வு ஜூன் 13 முதல் தொடங்குகிறது.

TCS & Infosys நிறுவனத்தில் 90,000+ பேருக்கு வேலைவாய்ப்பு – முழு விபரம் இதோ!

கர்நாடகா: கர்நாடகாவில் ஏப்ரல் 10 முதல் மே 15 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த கல்வி ஆண்டு மே 16 ஆம் தேதி தொடங்கும்.

ஒடிசா: ஒடிசா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்களுக்கும் ஜூன் 6 முதல் ஜூன் 16 வரை கோடை விடுமுறை என மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான கோடை விடுமுறை 35 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.`

ஆந்திர பிரதேசம்: ஆந்திராவில் மே 6 முதல் ஜூலை 4 வரை அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 30ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது.

சத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் பள்ளிகளுக்கு ஏப்ரல் 24 முதல் ஜூன் 14 வரை கோடை விடுமுறை என கல்வித்துறை அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!