ரயில் பயணிகளுக்கு இனி WhatsApp மூலம் உணவு டெலிவரி – வெளியான சூப்பர் அறிவிப்பு!

0
ரயில் பயணிகளுக்கு இனி WhatsApp மூலம் உணவு டெலிவரி - வெளியான சூப்பர் அறிவிப்பு!
ரயில் பயணிகளுக்கு இனி WhatsApp மூலம் உணவு டெலிவரி - வெளியான சூப்பர் அறிவிப்பு!
ரயில் பயணிகளுக்கு இனி WhatsApp மூலம் உணவு டெலிவரி – வெளியான சூப்பர் அறிவிப்பு!

ரயில் பயணிகளின் வசதிக்காக IRCTC புதிய சேவை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, பயணிகள் WhatsApp மூலமாகவே விருப்பப்பட்ட உணவினை ஆர்டர் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp உணவு டெலிவரி

உலகில் வணிக ரீதியிலான பல முன்னேற்றங்கள் ஏற்பட ஏற்பட மனிதர்களின் வேலைப்பாடுகள் குறைந்துகொண்டே செல்கின்றன. அதாவது, இருக்கும் இடத்தில் இருந்தே அனைத்தையும் பெற்றுக்கொள்ளும் வசதி வந்துவிட்டது. அதாவது, ஆன்லைன் மூலமாக துணிமணிகள், வீட்டிற்கு தேவையான டிவி, மிக்சி, சோபா, மொபைல், லேப்டாப் போன்ற மின்னனு சாதனங்கள் அனைத்தையும் இருந்த இடத்தில் இருந்தே பெற்றுக்கொள்ள முடிகிறது. அது மட்டுமல்லாமல் இருக்கும் இடத்திற்கே வந்து உணவினை பரிமாறும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது.

தமிழக விமான நிலையத்திற்கு இடம் கொடுத்தால் அரசு வேலை? வெளியான முக்கிய தகவல்!

அதாவது, இருக்கும் இடத்தில் இருந்தே எந்த உணவகத்தில் சாப்பிட விவரம்புகிறோமோ அந்த ஹோட்டலில் பிடித்த உணவினை ஆர்டர் செய்து கை வலிக்காமல் வீடு தேடி வரவழைக்கும்படியான ஆன்லைன் ஆப்கள் வந்துவிட்டன. இந்நிலையில், ரயில் பயணிகள் வாட்ஸ் அப் மூலமாக விருப்பப்பட்ட உணவினை ஆர்டர் செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, IRCTC வழங்கும் உணவு விநியோக சேவையான ZOOP மூலமாக பயணிகள் விருப்பப்பட்ட உணவினை ஆர்டர் செய்துகொள்ள முடியும்.

இதற்கு பிறகு பயணிகள் கஷ்டப்பட்டு ரயில்வே நிலையங்களில் விற்கப்படும் உணவினை சாப்பிட தேவையில்லை. விருப்பம் போல வாட்ஸ் அப் மூலமாக உணவினை ஆர்டர் செய்துகொள்ளலாம். ஆனால், பயணிகள் இதற்கென்று தனியாக எந்த ஆப்களையும் பதிவிறக்கம் செய்ய தேவையில்லை. பயணிகளின் PNR எண்ணை வைத்தே உணவினை ஆர்டர் செய்துகொள்ள முடியும். மேலும், ஆர்டர் செய்யப்பட்ட உணவினை உங்களது இருக்கைக்கே கொண்டுவந்து டெலிவரி செய்யும்படியான சேவையை IRCTC வழங்கியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here