மருத்துவர் தகுதிக்கான FMGE நுழைவுத் தேர்வு விண்ணப்ப பதிவு – மே 6 கடைசி நாள்!!

0
மருத்துவர் தகுதிக்கான FMGE நுழைவுத் தேர்வு விண்ணப்ப பதிவு - மே 6 கடைசி நாள்!!
மருத்துவர் தகுதிக்கான FMGE நுழைவுத் தேர்வு விண்ணப்ப பதிவு - மே 6 கடைசி நாள்!!
மருத்துவர் தகுதிக்கான FMGE நுழைவத் தேர்வு விண்ணப்ப பதிவு – மே 6 கடைசி நாள்!!

வெளிநாடுகளில் மருத்துவப் படிப்புகள் படித்த இந்திய இளைஞர்கள் இந்திய மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்வதற்கான FMGE நுழைவு தேர்வுக்கான விண்ணப்பங்களை அனுப்ப மே 6 ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FMGE நுழைவு தேர்வுகள்:

இந்திய மாணவர்கள் பலர் வெளிநாடுகள் சென்று மருத்துவப்படிப்பு பயின்று வருவார்கள். அவர்கள் இந்தியாவில் மருத்துவ தொழில் செய்ய இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ய வேண்டும். அதற்காக வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரி தேர்வு (FMGE – Foreign Medical Graduate Examination) என்ற நுழைவு தேர்வை தேசிய தேர்வுகள் வாரியம் (என்பிஇ) நடத்துகிறது.

TN Job “FB  Group” Join Now

இந்த தேர்வு மூலமாக வெளிநாடுகளில் மருத்துவ படிப்பு முடித்தவர்கள் இந்தியாவில் மருத்துவராக இந்திய மருத்துவக் கவுன்சிலின் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக பதிவு எண் பெற முடியும். இந்த தேர்வு மூலமாக விண்ணப்பதாரரின் மருத்துவம் செய்யும் திறன் சோதனை செய்யப்படும். இந்நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான FMGE நுழைவு தேர்வுக்கான விண்ணப்பதிவு நேற்று (ஏப்ரல் 16) முதல் தொடங்கியது.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

இந்த தேர்வு எழுத விருப்பமுள்ளவர்கள் https://natboard.edu.in/ என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வு ஜூன் மாதம் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் இதற்கான தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 30 ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மே 6 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!