தமிழக மக்களை பயமுறுத்தும் “ப்ளூ காய்ச்சல்” – சுகாதாரத்துறை எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!

0
தமிழக மக்களை பயமுறுத்தும்
தமிழக மக்களை பயமுறுத்தும் "ப்ளூ காய்ச்சல்" - சுகாதாரத்துறை எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!
தமிழக மக்களை பயமுறுத்தும் “ப்ளூ காய்ச்சல்” – சுகாதாரத்துறை எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து தற்போது புளூ காய்ச்சல் என்று அழைக்கப்படும் H1N1. எனப்படும் இன்புளூயன்சா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக சுகாதாரத்துறை அதிரடி முடிவை எடுத்துள்ளது.

ப்ளூ காய்ச்சல்

தமிழகத்தில் கொரோனா பரவல் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தற்போது அடுத்த ஆபத்தாக புளூ காய்ச்சல் என்று அழைக்கப்படும் H1N1. எனப்படும் இன்புளூயன்சா காய்ச்சலானது பல்வேறு இடங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் நடப்பு ஆண்டில் பள்ளிகளில் வழக்கம் போல நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதால் குழந்தைகள் மத்தியில் காய்ச்சலானது வெகு தீவிரமாக பரவி கொண்டிருக்கிறது. அதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

யூடியூப்பர்களுக்கு எச்சரிக்கை – இதை செய்யாதீங்க! மீறினால் வழக்கு பதிவு! மத்திய அரசின் அதிரடி முடிவு!

அதனால் காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் முதற்கட்ட நடவடிக்கையாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் முகாம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை தமிழகத்தில் இன்புளூயன்சா காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. மேலும் மழை, வெயில் என மாறுபட்ட பருவநிலை காரணமாக தான் இந்த காய்ச்சல் பரவுவதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் தமிழகத்தில் 5067 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் 1267 பேருக்கு இன்புளூயன்சா காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது போன்ற காய்ச்சல் பரவுவதை தடுக்க சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் அதிகரித்து வரும் காய்ச்சல் சோதனையை அதிகப்படுத்தும் விதமாக அடுத்த 15 நாட்களுக்கு 6 ஆயிரம் சோதனைக்கருவிகளை வாங்க உள்ளதாக சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. இதன் மூலமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை கண்டறிந்து மற்றவர்களுக்கு காய்ச்சல் பரவாமல் கட்டுப்படுத்தலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!