Flipkart நிறுவனத்தில் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு – சேவைகள் விரிவாக்கம்!

0
Flipkart நிறுவனத்தில் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு - சேவைகள் விரிவாக்கம்!
Flipkart நிறுவனத்தில் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு - சேவைகள் விரிவாக்கம்!
Flipkart நிறுவனத்தில் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு – சேவைகள் விரிவாக்கம்!

பிரபல ஆன்லைன் விற்பனை தலமான பிளிப்கார்ட் நிறுவனம், தனது சேவையில் தமிழகம் மற்றும் கேரளாவில் செயல்பட்டு வரும் மளிகைக் கடைகளை சேர்த்துள்ளது. அதனால் 1,000 க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக தெரிவித்துள்ளது.

ஆன்லைன் சேவைகள்

முந்தய காலங்களில் கடைகளுக்கு சென்று ஏதேனும் பொருட்களை வாங்க விரும்புபவர்கள் நீண்ட வரிசையில் நெடு நேரமாக காத்திருக்க வேண்டிய சூழல் தற்போது மாறிவிட்டது. அதாவது உலகளவில் வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பம் பல வகையான சேவைகளை ஆன்லைன் மூலம் பெற்றுக்கொள்ளும் படி எளிதாகியுள்ளது. அந்த வகையில் நாம் இருக்கும் இடத்தில் இருந்தே நமக்கு தேவையான வீட்டு ஜாமான்கள், மளிகை பொருட்கள், ஜவுளிகள் ஆகியவற்றை ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ள முடியும். இதற்காக நாம் அலைய வேண்டியதில்லை, கூடவே நேரமும் அதிகளவு மிச்சமாகிறது.

அஞ்சல் துறையில் ஆயுள் காப்பீடு முகவர் வேலைவாய்ப்பு – ஆகஸ்ட் 21 நேர்காணல்!

இவ்வகையான ஆன்லைன் விற்பனை தலத்தில் முன்னணி இடத்தை வகித்திருக்கும் பிளிப்கார்ட் நிறுவனம் தமிழ்நாடு மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மளிகை சேவைகளை விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது. அதாவது பிராந்திய விரிவாக்கம் மையப்படுத்தப்பட்ட சந்தை மாதிரி மூலம் அமைக்கப்படும் புதிய மையத்தில் 150 க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு சேவை தொடரும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இவ்வகை புதிய சேவைகள் மூலம் சுமார் 1000க்கும் மேற்பட்ட புதிய ஊழியர்களை பணியமர்த்துவதற்கு இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கையில், கோயம்புத்தூர், மதுரை, திருச்சி மற்றும் ஈரோடு, கேரளாவின் எர்ணாகுளம் உள்ளிட்ட இடங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட் தளம் மூலம் உயர்தர மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும். மேலும் இந்த தகவல் குறித்து பிளிப்கார்ட்டின் துணைத் தலைவர் கூறுகையில், ‘கடந்த ஒரு வருடமாக நாடு முழுவதும் நுகர்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும் விற்பனையாளர்கள், பிராண்டுகள் மற்றும் விவசாயிகளுடன் இந்த சேவையை அதிகரிப்பதில் பிளிப்கார்ட் கவனம் செலுத்தியுள்ளது’ என தெரிவித்துள்ளார். இந்நிறுவனத்தின் வழிகாட்டுதலின் கீழ் தமிழ்நாடு மேலாண்மை இயக்குனர் பூஜா குல்கர்னி, மளிகை பொருட்கள் நிறைவு மையம் உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்பின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் எனவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் பிளிப்கார்ட்டின் இ-காமர்ஸ் வணிகத்திற்கு அதிக உத்வேகத்தை அளிக்கும் என்றும் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!