Google Pay வில் ஃபிக்ஸட் டெபாசிட் அறிமுகம் – பயனர்களிடம் வரவேற்பு!

0
Google Pay வில் ஃபிக்ஸட் டெபாசிட் அறிமுகம் - பயனர்களிடம் வரவேற்பு!
Google Pay வில் ஃபிக்ஸட் டெபாசிட் அறிமுகம் - பயனர்களிடம் வரவேற்பு!
Google Pay வில் ஃபிக்ஸட் டெபாசிட் அறிமுகம் – பயனர்களிடம் வரவேற்பு!

அதிகமாக பணப்பரிவர்த்தனைக்கு கூகுள் பே பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது கூகுள் பே செயலி மூலம் சுலபமாக ஃபிக்ஸட் டெபாசிட் கணக்கு துவங்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஃபிக்ஸட் டெபாசிட்:

நாடு முழுவதும் பண பரிவர்த்தனை வங்கிகளின் வழியாக நடந்து வந்த நிலையில் போன்பே மற்றும் கூகுள் பே அறிமுகப்படுத்தப்பட்டது. கூகுள் பே மூலம் தற்போது ஃபிக்ஸட் டெபாசிட் கணக்கு துவங்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஈக்விட்டாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கியுடன் கூகுள் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது கூகுள் நிறுவனத்தின் செயலி என்பதால் நம்பகத்தன்மை அதிகரித்துள்ளது.

தமிழக அரசு சார்பில் பசுமை முதன்மையாளர் விருது – அமைச்சர் அறிவிப்பு!

பொதுவாக ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு செய்ய வங்கி கணக்கு தொடங்குவது கட்டாயம். ஆனால் கூகுள் பே மூலம், வங்கிக் கணக்கு இல்லாமலேயே வைப்பு நிதியில் முதலீடு செய்யலாம் என கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு, 6.35 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுவதாக எக்விட்டாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த சேவை மக்களுக்கு பெரும் லாபகரமானதாக இருக்கும் எனவும் இதனால் மக்களிடையே பெரும் வரவேற்பு இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் விலையில் பல சிறப்பு அம்சங்களுடன் சூப்பர் போன் – இந்தியாவில் Redmi 10 Prime வெளியீடு!

இந்த சேவையை பெறுவதற்கு முதலில் கூகுள் பே செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்வது கட்டாயம். டெபாசிட் குறித்த விவரங்களை வாடிக்கையாளர்கள் எளிதில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே கூகுள் பே செயலியிலேயே ட்ராக் செய்யும் வசதி இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் எளிமையாக அமைந்திருக்கும் என கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!