HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – Fixed Deposit வட்டியில் புதிய மாற்றம்!

0
HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - Fixed Deposit வட்டியில் புதிய மாற்றம்!
HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - Fixed Deposit வட்டியில் புதிய மாற்றம்!
HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – Fixed Deposit வட்டியில் புதிய மாற்றம்!

சமீப காலமாக இந்திய வங்கிகளில் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் என்பது மிக குறைவாகவே இருந்து வருகின்றது. ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தினை குறைவாக வைத்துள்ள நிலையில், வட்டி விகிதம் என்பது மிக குறைவாகவே உள்ளது. இப்படியொரு நிலையில் தான் தனியார் முன்னணி வங்கியான, எச்டிஎஃப்சி வங்கி அதன் பிக்சட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை மாற்றியுள்ளது.

புதிய வட்டி விகிதம்:

எச்டிஎஃப்சி வங்கி, மும்பை, மகாராஷ்டிராவை தலைமையகமாக கொண்டு செயல்படும் ஒரு இந்திய வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனம் ஆகும். ஏப்ரல் 2021 நிலவரப்படி, சந்தை மூலதனம் மற்றும் சொத்துக்கள் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியாக எச்டிஎஃப்சி வங்கி உள்ளது. இந்நிலையில் HDFC வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு, மீண்டும் ஒரு முக்கிய செய்தியை வழங்கியுள்ளது. வங்கி மீண்டும் நிலையான வைப்புக்கான விகிதத்தை மாற்றியுள்ளது.இந்த வட்டி விகிதங்கள் (நேற்று) ஏப்ரல் 20 முதல் அமலுக்கு வந்துள்ளன. மேலும் புதிய விகிதங்கள் ரூ. 2 கோடிக்கு குறைவான எஃப்டி-களுக்கு பொருந்தும்.புதிய வட்டி விகிதங்களில் பொது வாடிக்கையாளர்களுக்கு 2.50% முதல் 5.60% வரையிலான வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டங்களில் சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதலாக 0.50 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அரசாணை வெளியீடு!

வங்கியின் சார்பில், சாதாரண குடிமக்களுக்கு 7 முதல் 29 நாட்கள் வரையிலான எஃப்டி-களுக்கு 2.50 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இது தவிர, வங்கி 30 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையிலான எஃப்டி-களுக்கு 3% வட்டி அளிக்கிறது. புதிய மாற்றத்திற்குப் பிறகு, எச்டிஎஃப்சி வங்கி 91 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு 3.50 வட்டி அளிக்கிறது.

வங்கியின் இணையதளத்தின்படி, ஒரு நாள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஒரு வருடத்தில் முதிர்ச்சியடையும் எஃப்டி-களுக்கு 5.10 சதவீத வட்டி வழங்கப்படும். இரண்டு வருடங்கள் 1 நாள் முதல் மூன்று வருடங்களுக்கான எஃப்டி-களின் வட்டி விகிதம் 5.20 சதவீதம் ஆகும். மூன்று ஆண்டுகள் 1 நாள் முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான எஃப்டி-களுக்கு 5.45 சதவீத வட்டி விகிதமும், ஐந்து ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான எஃப்டி-களுக்கு 5.60 சதவீத வட்டியும் கிடைக்கும்.

1. 7 – 14 நாட்கள்: 2.50% ,15 – 29 நாட்கள் : 2.50%

2. 30 – 45 நாட்கள்: 3%, 46 – 60 நாட்கள் : 3%

3. 61 – 90 நாட்கள்: 3%, 91 நாட்கள் – 6 மாதம் : 3.50%

ExamsDaily Mobile App Download

4. 6 மாதம் 1 நாள் – 9 மாதம்: 4.40%, 9 மாதம் 1 நாள் – 1 ஆண்டு : 4.40%

5. 1 ஆண்டு: 5.10%, 1 ஆண்டு 1 நாள் – 2 ஆண்டு : 5.10%

6. 2 ஆண்டு 1 நாள் – 3 ஆண்டு: 5.20% , 3 ஆண்டு 1 நாள் – 5 ஆண்டு: 5.45%

7. 5 ஆண்டு 1 நாள் – 10 ஆண்டு: 5.60%

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!