தமிழகத்தில் முதலாம் ஆண்டு MBBS வகுப்புகள் தொடக்கம் – முழு விவரம் உள்ளே!

0
தமிழகத்தில் முதலாம் ஆண்டு MBBS வகுப்புகள் தொடக்கம் - முழு விவரம் உள்ளே!
தமிழகத்தில் முதலாம் ஆண்டு MBBS வகுப்புகள் தொடக்கம் - முழு விவரம் உள்ளே!
தமிழகத்தில் முதலாம் ஆண்டு MBBS வகுப்புகள் தொடக்கம் – முழு விவரம் உள்ளே!

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நேற்று முதல் MBBS மாணவர்களுக்கான கலந்தாய்வு முடிந்து முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.

வகுப்புகள் தொடக்கம்:

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பில் பெறப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ படிப்பிற்கான சீட்டுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. நீட் தேர்வு குறித்து பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் இருந்து வரும் நிலையில் தேர்வு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.

NEET Super Specialty கவுன்சிலிங் அட்டவணை 2022 – வெளியீடு!

Follow our Instagram for more Latest Updates

சமீபத்தில் MBBS மாணவர்களுக்கான கலந்தாய்வு முடிந்த நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு தொடங்கியுள்ளது. குறிப்பாக மதுரை மருத்துவ கல்லூரியில் 250 மாணவர்களில் 226 மாணவர்களுக்கான சேர்க்கை முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள 24 காலியிடங்கள் விரைவில் நிரப்பப்பட்டு அதன்பின் white coat ceremony கொண்டாடப்படும் என அக்கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் வி தனலட்சுமி தெரிவித்துள்ளார். தமிழகத்தின் விருதுநகர், திண்டுக்கல், ராமநாதபுரம், கன்னியாகுமரி போன்ற பிற மாவட்டங்களில் இருக்கும் அரசு மருத்துவ கல்லூரிகளிலும் நேற்று முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!