விஜய் டிவி ‘பிக் பாஸ் சீசன் 5’ நிகழ்ச்சியின் முதல் எலிமினேஷன் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

0
விஜய் டிவி 'பிக் பாஸ் சீசன் 5' நிகழ்ச்சியின் முதல் எலிமினேஷன் - ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
விஜய் டிவி 'பிக் பாஸ் சீசன் 5' நிகழ்ச்சியின் முதல் எலிமினேஷன் - ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
விஜய் டிவி ‘பிக் பாஸ் சீசன் 5’ நிகழ்ச்சியின் முதல் எலிமினேஷன் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் இரண்டாவது வாரம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், வீட்டின் தலைவரான தாமரைச்செல்வி மற்றும் பாவனி ரெட்டி ஆகியோர் தவிர மற்ற அனைவரும் நாமினேட் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து முதலில் எலிமினேட் செய்யப்படும் நபர் இவர் தான் என தகவல் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் சீசன் 5:

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. முதல் நாளில் 18 போட்டியாளர்கள் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். அதன் பின் முதல் வாரத்தில் திருநங்கை நமீதா மாரிமுத்து சில தவிர்க்க முடியாத காரணத்தினால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அதற்கான சரியான காரணம் எதுவும் தெரியாமல் இருக்க, தற்போது இரண்டாவது வாரம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் வீட்டின் தலைவரை தேர்வு செய்ய முதல் போட்டி நடத்தப்பட்டது.

கண்ணம்மாவிடம் ஹேமாவை தர மறுக்கும் பாரதி, DNA டெஸ்ட் எடுக்க வைப்பாரா? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

அதில் வெற்றி பெற்று தாமரை செல்வி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் மீண்டும் நடைபெற்று வருகிறது. அதில் மீதமுள்ள போட்டியாளர்கள் தங்களது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பற்றி பேசி வருகின்றனர். மேலும் வீட்டின் தலைவர் தாமரை மற்றும் பாவனி ஆகியோர் தவிர மற்ற அனைவரும் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அதனால் இந்த வாரம் யார் இந்த போட்டியில் இருந்து எலிமினேட் செய்யப்படுவார் என ஆர்வம் அதிகரித்துள்ளது.

கண்ணம்மா, சௌந்தர்யாவுடன் பிறந்தநாளை கொண்டாடிய ஹேமா – வெளியான புகைப்படங்கள்!

மேலும் நாமினேட் செய்யப்படுவார்களின் யார் வீட்டிற்குள் இருக்கலாம் என மக்கள் தங்களது வாக்களிப்பு மூலம் தேர்ந்தெடுக்கலாம். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் அபிஷேக் அல்லது இசைவாணி வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அபிஷேக் ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்களிடம் நெகட்டிவ் கமெண்ட் பெற்று இருப்பதால் அவர் வெளியே அனுப்பப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நாதியா இந்த வீட்டை விட்டு அனுப்பப்படுவார் என ஒரு சிலர் தெரிவிக்கின்றனர். ஆரம்பத்தில் இருந்தே அவர் ஆக்டிவாக இல்லாமல் இருப்பதால் அவர் வெளியேற வாய்ப்புள்ளதாக தோன்றுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here