தங்க நகைகளை விற்பனை செய்ய திட்டமிடுபவர்கள் கவனத்திற்கு – நிதி சிக்கல்கள்!

0
தங்க நகைகளை விற்பனை செய்ய திட்டமிடுபவர்கள் கவனத்திற்கு - நிதி சிக்கல்கள்!
தங்க நகைகளை விற்பனை செய்ய திட்டமிடுபவர்கள் கவனத்திற்கு - நிதி சிக்கல்கள்!
தங்க நகைகளை விற்பனை செய்ய திட்டமிடுபவர்கள் கவனத்திற்கு – நிதி சிக்கல்கள்!

கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் வீட்டு தேவைகளுக்காகவோ அல்லது வேறு எந்த தேவைகளுக்காகவும் நகைகளை விற்க நினைப்பவர்கள் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

நகை விற்பனையில் சிக்கல்:

பொதுவாக தங்கத்தின் விலையானது ஒவ்வொரு நாளும் ஏற்ற, இறக்கத்தை கண்டு வருகிறது. அதனால் நகை வாங்குவதற்கோ, விற்பதற்கோ நிலையான விலை என ஒன்று நிர்ணயிக்க முடிவதில்லை. இந்த சூழலில் நடைக்கடை விற்பனையாளர்களும், அன்றைக்கு உள்ள விலையின் அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு தங்கத்தை விற்பனை செய்கிறார்கள். இதனால் உங்கள் நகைகளை விற்பனை செய்யும் போது சரியான விற்பனையாளர்களை அணுகி உங்கள் தங்கத்துக்கு நல்ல தொகைகளை பெறலாம்.

தமிழகத்தில் ஜூன் 14க்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பு – மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரை!!

பொதுவாக தங்கத்தின் அளவு காரட் மூலம் கணக்கிடப்படுகிறது. நகைகளை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள காரட் மீட்டர் வைத்திருக்கும் நகைக்கடைக்காரர்களிடம் சென்று உங்கள் நகைகளை குறித்து சரிபார்க்கலாம். அந்த வகையில் தங்கத்தின் மதிப்பை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு தங்க நகையில் அல்லது தங்கத்தில் BIS குறியீடு இருந்தால், அது இந்திய தர நிர்ணய பணியகத்தால் ஏற்கப்படும் தரங்களுக்கு ஏற்ப அமைந்துள்ளது என தெரிந்து கொள்ள முடியும்.

பொதுவாக கடைகளில் விற்கப்படும் தங்கத்தில் செய்கூலி, சேதாரம், தேய்மானம், தங்கத்தின் தூய தன்மை என பல வகைகளில் உங்கள் தங்கம் கழிக்கப்பட வாய்ப்புள்ளது. இதே போல பழைய நகையை புதிய நகையாக மாற்றும் போது நகைக்கடைக்காரர், இடைத்தரகர் என பல வகையிலும் நீங்கள் ஏமாற வாய்ப்புள்ளது. அதனால் உங்கள் நகையை விற்பனை செய்வதற்கு முன், நகைக்கடைக்காரர் கணக்கிடக்கூடிய விரயத்தை சரிபார்க்க வேண்டும்.

சில சமயங்களில் நகைக்கடைக்காரர்கள், நகைகளில் உள்ள கற்களுக்கேற்ப 20% வரை Wastage பணத்தை கழிக்க முடியும். மேலும் ஒவ்வொரு முறையும் தங்கம் வாங்கும்போது, நகைக்கடை, Stock Holding Corporation of India, வங்கி சாரா நிறுவனம் அல்லது ஆன்லைன் மூலம் நகைகளை பெற்றுக்கொண்டாலும், வாங்குதல் விதிமுறைகளை அறிந்து கொள்வது கட்டாயம்.

TN Job “FB  Group” Join Now

தங்கத்தை ஒரு நகைக்கடைக்காரருக்கு விற்றால், உங்களுக்கு குறைந்த மதிப்பீடு மட்டும் தான் கிடைக்கும். அதாவது நகைக்கடைக்காரர் தயாரிக்கும் கட்டணங்கள் மற்றும் நிர்வாகக் கட்டணங்களுக்கு பணம் செலுத்த தேவையில்லை. அதுவே நீங்கள் ஒரு வங்கியில் இருந்து தங்கத்தை வாங்கினால், RBI ன் உத்தரவு படி அதை மீண்டும் வங்கியில் விற்க முடியாது. இதனால் பல வகையிலும் விசாரித்து, யோசித்து அதிக தொகை கிடைக்கும் இடத்தை தெரிந்து கொண்டு தங்கத்தை விற்பனை செய்யலாம்.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here