சுயதொழில் தொடங்க விரும்புவர்களுக்கு மானியத்துடன் நிதியுதவி – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

0
சுயதொழில் தொடங்க விரும்புவர்களுக்கு மானியத்துடன் நிதியுதவி - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
சுயதொழில் தொடங்க விரும்புவர்களுக்கு மானியத்துடன் நிதியுதவி - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
சுயதொழில் தொடங்க விரும்புவர்களுக்கு மானியத்துடன் நிதியுதவி – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாநில அரசு மானியத்துடன் கூடிய நிதி உதவி வழங்க இருப்பதாகவும்,அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மானியத்துடன் நிதிஉதவி:

தமிழக அரசு மாநிலத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்றவர்களுக்கு உதவிடும் வகையில், மானியத்துடன் கூடிய கடன் வழங்குகிறது. இதன் மூலம் சுய தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள் இந்த உதவியினை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அவர்கள் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வருகை – மாவட்ட ஆட்சியர் தகவல்!

அதில், தமிழகத்தில் படித்த வேலை, சுயதொழில் தொடங்க விருப்பமுள்ளவர்களுக்கு வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுப்பதற்காக அரசு கடன் உதவி தொகை வழங்குகிறது. இந்த திட்டம் சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த திட்டத்தில் குறிப்பிட்ட தொழில்களுக்கு ரூ.15 லட்சம் மற்றும் சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலும் கடன் தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்காக நடப்பாண்டில் ரூ.65 லட்சம் மானியமாக அரசு ஒதுக்கியுள்ளது. மேலும், அதிகபட்சமாக ரூ.2.50 லட்சம் மானியமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

பொதுப்பிரிவை சேர்ந்த ஆண்கள் 18 வயது முதல் 35 வயது வரையும், ஆதிதிராவிடர் பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கையர், மற்றும் மாற்றுத்திறனாளிகள், 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தில் பயனடையலாம். குறைந்த பட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். மேலும், குடும்ப வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதள முகவரியில் உள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பள்ளி மாற்றுச்சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதிச்சான்றிதழ் போன்றவற்றை இணைத்து பதிவேற்ற வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை இரண்டு நகல்களுடன் மாவட்ட தொழில் மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here