“ஈஸ்வரன் பட நடிகரின் ரெட் கார்டு நீக்கம்” – திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு!

0
"ஈஸ்வரன் பட நடிகரின் ரெட் கார்டு நீக்கம்" - திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு!
“ஈஸ்வரன் பட நடிகரின் ரெட் கார்டு நீக்கம்” – திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக உள்ள சிம்பு படங்களில் நடிக்க தடை செய்யப்படுவதாக, வழங்கப்பட்ட ரெட் கார்டை தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நீக்கியுள்ளது.

ரெட் கார்டு நீக்கம்:

தமிழக திரை வரலாற்றில் தனக்கென ஓரு நடிப்பு பாணியையும், ரசிகர் பட்டாளத்தையும் வைத்து உள்ளவர் STR என்று அழைக்கப்படும் “லிட்டில் சூப்பர் ஸ்டார்” சிம்பு. முன்னணி தயாரிப்பாளரான T. ராஜேந்திரனின் மகன் சிலம்பரசன் என்ற சிம்பு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இந்த நிலையில் நடிகர் சிம்புவுக்கும், பிரச்சினைக்கும் பஞ்சமில்லை என்பது போல சமீப காலமாக இவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்து வந்தன. இதற்கிடையில் இவர் நடித்த படமான ஈஸ்வரன் பட பாடல் யூடியூபில் பல்வேறு லைக்குகளை அள்ளி குவித்தது குறிப்பிடத்தகுந்தது.

IPL 2021 அப்டேட்ஸ் – உலகின் நம்பர் 1 வீரரை களமிறக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி!

தற்போது, இவர் சமீப காலமாக படப்பிடிப்புகளில் சரிவர கலந்து கொள்ளாததால் தயாரிப்பாளருக்கு மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் அவர் பிற படங்களில் நடிக்க, அனுமதி மறுக்கப்படும் விதமாக ரெட் கார்டை திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வழங்கியது. இதனால், பெப்சி திரைப்பட பணியாளர்கள் அவர் சார்ந்த படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்ற திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் ரெட் கார்டை பெப்சி பணியாளர் அமைப்பு உறுதி செய்தது.

TN Job “FB  Group” Join Now

இந்த நிலையில், தற்போது சிம்பு “வெந்து தணிந்தது காடு” என்ற கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் பெப்சி திரைப்பட பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதனை அடுத்து படப்பிடிப்பில் சரிவர கலந்து கொள்ளாததால் நஷ்டம் அடைந்ததாக மைக்கேல் ராயப்பன் வழக்கு தொடர்ந்த நிலையில் அது நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அந்த வழக்கை நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பார்த்து கொள்ளட்டும் எனக்கூறி நடிகர் சிம்புவுக்கு வழங்கப்பட ரெட் கார்டை நீக்குவதாக திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதனால், இவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!