உலகம் முழுவதும் குறைந்த கொரோனா மரணங்கள் – உலக சுகாதார நிறுவனம் தகவல்!

0
உலகம் முழுவதும் குறைந்த கொரோனா மரணங்கள் - உலக சுகாதார நிறுவனம் தகவல்!
உலகம் முழுவதும் குறைந்த கொரோனா மரணங்கள் - உலக சுகாதார நிறுவனம் தகவல்!
உலகம் முழுவதும் குறைந்த கொரோனா மரணங்கள் – உலக சுகாதார நிறுவனம் தகவல்!

கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸின் வீரியம் தற்போது குறைந்துள்ள நிலையில், 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தை விட தற்போது கொரோனா மரணங்கள் குறைந்து வருவதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா மரணங்கள்:

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வுகான் நகரில் உலக நாடுகளை அச்சுறுத்திய கொரோனா வைரஸ் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2 ஆண்டுகளில் 228 நாடுகளில் இதன் பாதிப்பு அதிகமாக இருந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் இறக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. கொரோனாவில் இருந்து மீண்டு வர ஊரடங்கு கட்டுப்பாடுகளே ஒரே தீர்வாக இருந்தது. மேலும் பல நாடுகளில் இந்த வைரஸிற்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டது.

அதன் காரணமாகவே கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் அதற்குள் ஏகப்பட்டவர்கள் தங்களுடைய சொந்தங்களை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் கொரோனாவால் லட்சக்கணக்கில் மக்கள் இறந்துள்ள நிலையில், தற்போது கொரோனா மரணம் குறைந்து வருவதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழக அரசுப் பள்ளிகளில் இனிதே துவங்கிய ‘காலை உணவு திட்டம்’ – முதல்வர் ஸ்டாலின் உரை!

Exams Daily Mobile App Download

அதில் உலகளவில் கொரோனாவால் ஏற்பட்ட அச்சுறுத்தல் முடிவுக்கு வருவதுபோல் உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவு கடந்த வாரம் குறைந்துள்ளது. இருந்த போதிலும் கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆனால் விரைவில் முடிவுக்கு வர இருப்பதற்கான அறிகுறிகள் இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். முழுமையாக கொரோனா பாதிப்பு குறைந்தால் தான் மக்கள் நிம்மதியாக வாழ முடியும் என்பதில் சந்தேகமில்லை.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here