பெண்களின் கல்வியறிவு விகிதம் 77% ஆக உயர்வு – வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்!

0
பெண்களின் கல்வியறிவு விகிதம் 77% ஆக உயர்வு - வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்!
பெண்களின் கல்வியறிவு விகிதம் 77% ஆக உயர்வு - வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்!
பெண்களின் கல்வியறிவு விகிதம் 77% ஆக உயர்வு – வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்!

இந்தியாவில் கல்வியறிவு விகிதம் குறித்த அறிக்கையை LiveMint நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் மாநில வாரியாக கல்வியறிவு விகிதங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்களை பார்ப்போம்.

கல்வியறிவு விகிதம்

இந்தியாவில் கல்வியறிவு விகிதங்கள் குறித்த ஆய்வு அறிக்கையை LiveMint நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்பாக பெண்களின் கல்வியறிவு விகிதம் 9% மட்டுமே என இருந்தது. தற்போது பெண்களின் கல்வியறிவு விகிதம் 68% உயர்ந்து 77% ஆக உயர்ந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்.06 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – மார்ச். 17 ஹால் டிக்கெட் வெளியீடு!

இதை தொடர்ந்து, இந்தியாவில் ஆண்கள் 84.7% பேர் கல்வியறிவு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய நாட்டிலேயே அதிக கல்வியறிவு பெற்ற மாநிலமாக கேரளாவில் 92.2% பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக யூனியன் பிரதேசமான லட்சத்தீவுகளில் 91.85% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.

இதே போல் பீகார் (61.8 %) மாநிலம் குறைந்த கல்வியறிவு பெற்ற மாநிலமாக உள்ளது. அத்துடன் கிராமங்களை விட நகரங்களில் அதிக கல்வியறிவு பெற்றுள்ளனர். அதாவது, கிராமங்களில் 67.77% ஆகவும் நகர்ப்புறங்களில் 84.11% ஆகவும் பதிவாகியுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!