ரேஷன் கார்டுகளை ஆதார் அட்டையுடன் இணைக்க ஜூன் 30 கடைசி நாள் – மத்திய அரசு அறிவிப்பு!

0
ரேஷன் கார்டுகளை ஆதார் அட்டையுடன் இணைக்க ஜூன் 30 கடைசி நாள் - மத்திய அரசு அறிவிப்பு!
ரேஷன் கார்டுகளை ஆதார் அட்டையுடன் இணைக்க ஜூன் 30 கடைசி நாள் - மத்திய அரசு அறிவிப்பு!
ரேஷன் கார்டுகளை ஆதார் அட்டையுடன் இணைக்க ஜூன் 30 கடைசி நாள் – மத்திய அரசு அறிவிப்பு!

ரேஷன் கார்ட் என்பது முக்கியமான அடையாள அட்டையாக இருக்கிறது. இந்நிலையில் ரேஷன் அட்டை உடன் ஆதார் அட்டையை கட்டாயம் இணைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான கடைசி தேதி ஜூன் 30 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டுகள்:

நாடு முழுவதும் மக்களுக்கு ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த ரேஷன் அட்டைகளை ஆதார் அட்டைகளுடன் இணைப்பது கட்டாயம் ஆகும். அவ்வாறு இணைத்தது பின் டிஜிட்டல் ரேஷன் அட்டைகள் வழங்கப்படும். அதன் மூலம் மக்கள் எந்த இடத்தில் இருந்தும் ரேஷன் பொருள்களை வாங்கி கொள்ளலாம். மேலும் ரேஷன் அட்டைகள் குறித்து வரும் முறைகேடுகள், போலி ரேஷன் அட்டைகள் இதன் மூலம் தடுக்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

ரேஷன் அட்டை மூலமாக PM Awas Yojana, PM Garib Kalyan Anna Yojana மற்றும் பல திட்டங்களில் வழங்கப்படும் சலுகைகளை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் கொரோனா காலத்தில் அரசின் நிதியுதவிகளும் ரேஷன் கார்டுகள் மூலமாக தான் வழங்கப்பட்டது. அத்தகைய முக்கியமான ரேஷன் அட்டைகளை ஆதாருடன் இணைக்க ஏற்கனவே மார்ச் 31, 2022 கடைசி தேதி என சொல்லப்பட்டது.

10, 11 & 12 ஆம் வகுப்பு துணைத்தேர்விற்கு தயாராகி வரும் மாணவர்கள் கவனத்திற்கு – இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்!

ஆனால் தற்போது அது நீட்டிக்கப்பட்டு ஜூன் 30, 2022 ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு மேல் தேதி நீடிக்கப்படாது எனவும் ரேஷன் அட்டைகளை ஆதாருடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுகள் இணைக்கப்பட்டு வருகிறது. இதனால் நாடு முழுவதும் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியும், கடைசி தேதிக்குள் ரேஷன் கார்டுகளை இணைக்காமல் இருந்தால் பல அரசு திட்டங்கள் உங்களுக்கு கிடைக்காமல் போகும் என்பதால் உடனே விரைந்து சென்று ரேஷன் அட்டையை ஆதாருடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!