10ம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு வங்கி வேலை – நேர்காணல் மட்டுமே..!

0
10ம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு வங்கி வேலை - நேர்காணல் மட்டுமே..!
10ம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு வங்கி வேலை - நேர்காணல் மட்டுமே..!
10ம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு வங்கி வேலை – நேர்காணல் மட்டுமே..!

பெடரல் வங்கி (Federal Bank) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Sweeper பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

நிறுவனம் Federal Bank
பணியின் பெயர் Sweeper
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online

Federal Bank காலிப்பணியிடங்கள்:

பெடரல் வங்கி வெளியிட்டுள்ள Sweeper பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Federal Bank கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாத நபர்கள் விண்ணப்பித்தால் போதுமானதாகும்.

Federal Bank வயது விவரம்:

01.01.1967 ம் தேதி முதல் 01.01.1987 ம் தேதி வரை பிறந்த நபர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் 01.01.2022 நாளின் படி, 35 முதல் 55 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

Federal Bank ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.4,833/- முதல் ரூ.10,875/- வரை வழங்கப்படும். மேலும் HRA மற்றும் கூடுதல் தொகை குறித்து அறிவிப்பில் காணலாம்.

Federal Bank தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Federal Bank விண்ணப்பிக்கும் முறை:

இந்த வங்கிப் பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் 30.04.2022ம் தேதி இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Federal Bank  Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!