மத்திய மற்றும் மாநில அரசுகளின் மருத்துவக் காப்பீடு திட்டம் – முக்கிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

0
மத்திய மற்றும் மாநில அரசுகளின் மருத்துவக் காப்பீடு திட்டம் - முக்கிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
மத்திய மற்றும் மாநில அரசுகளின் மருத்துவக் காப்பீடு திட்டம் - முக்கிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
மத்திய மற்றும் மாநில அரசுகளின் மருத்துவக் காப்பீடு திட்டம் – முக்கிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

மருத்துவ காப்பீட்டு திட்டங்களை எடுக்க விரும்பும் பயனர்கள் மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் காப்பீடு திட்டத்தில் உள்ள சில முக்கியமான விவரங்களை தெரிந்து கொள்வது அவசியம் ஆகும். இதற்கான முக்கிய வழிகாட்டுதல்களை இப்பதிவில் காணலாம்.

மருத்துவக் காப்பீடு

அவசர தேவைக்காக பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த காப்பீட்டு திட்டங்களின் மூலம் பொது மக்கள் மருந்துகள், மருத்துவ கட்டணங்கள், சிகிச்சைக்கான செலவுகள் ஆகியவற்றில் சலுகைகளை பெற்று பயன்பெற முடியும். குறிப்பாக இந்த காப்பீடு திட்டங்கள் அறுவை சிகிச்சை செய்வதில் முக்கிய பங்களிப்பை வழங்குகிறது. இப்போது ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கியத் திட்டம் என்ற பெயரில் மத்திய அரசு காப்பீடு திட்டங்களை வழங்குகிறது.

Exams Daily Mobile App Download

அதே போல தமிழக அரசும், முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் என்ற பெயரில் இந்த சேவைகளை கொடுக்கிறது. இந்த மருத்துவக் காப்பீடு திட்டம் பொதுவாக நீண்ட காலம் செல்லுபடியாகும் ஒரு பாலிசியாகும். இந்த பாலிசியை பெற்றுக்கொள்ள சில விதிமுறைகளும், சலுகைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முதலாவதாக, ஒருவர் சம்பாதிக்க தொடங்கும் போதே மருத்துவக் காப்பீடு பெற வேண்டியது நன்மை பயக்கும். ஏனென்றால் முன்பு எடுக்கப்பட்ட பாலிசியில் பலன்கள் அதிகமாக இருக்கும். ஆனால், புதிய பாலிசிகள் பெரும்பாலும் அடிப்படை கவரேஜை மட்டுமே வழங்குகின்றன.

தமிழகத்தில் புதிதாக 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் விளக்கம்!

தவிர, மருத்துவ காப்பீடு பெற்ற 2 முதல் 5 ஆண்டுகளுக்குப் பிறகு தான் சில நோய்களுக்கான சிகிச்சையை பெற, நிறுவனங்கள் அனுமதிக்கின்றன. மேலும், வயது, செலவு, மருந்துகளின் விலை உயர்வு போன்றவற்றை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ற வகையில் பாலிசியை எடுக்க வேண்டும். இந்த கால கட்டத்தில் மகப்பேறு அறுவை சிகிச்சைக்கும் அதிகளவு செலவு காணப்படுகிறது என்பதால் இதற்காகவும் சில காப்பீடுகள் கொடுக்கப்படுகிறது. பொதுவாக, மருத்துவக் காப்பீட்டு திட்டங்களுக்கு வருமான வரி பிரிவு 80Dன் கீழ் விலக்கு அளிக்கப்படுகிறது. அந்த வகையில் பிரீமியம் மற்றும் குறிப்பிட்ட வரம்பு வரையுள்ள வரிகளுக்கு சலுகைகள் வழங்கப்படுகிறது கவனிக்கத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!