பிப்ரவரி 5 நடப்பு நிகழ்வுகள்

0

தமிழகம்

ரயில் விபத்துகளால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்: பட்ஜெட்டில் தண்டவாளங்களை
புதுப்பிக்கவே நிதி ஒதுக்கீடு

  • நாடுமுழுவதும் 1 லட்சத்து 16 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  • தினமும் இயக்கப்படும் 12 ஆயிரம் பயணிகள் ரயில்களில், சுமார் 2 கோடியே 30 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர்.
  • ரயில்வே துறையை மேம்படுத்தி,பயணிகளுக்கு சிறப்பான சேவையை வழங்க தனியார் பங்களிப்புடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு
அதிகரிப்பு: 

  • கடந்த 16 ஆண்டுகளில், அமெரிக்கா சென்று படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளதாக சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதர் ராபர்ட் பர்ஜெஸ் தெரிவித்தார்.

எம்.எல்.ஏ.க்களுக்கான ஊதிய உயர்வு மசோதாவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்

  • எம்.எல்.ஏ.க்களுக்கான ஊதிய உயர்வு மசோதாவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார். மார்ச் 1ம் தேதி முதல் நிலுவைத் தொகை மற்றும் ஊதிய உயர்வுடன் எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.

மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் 13 லட்சத்து 60 ஆயிரம் பெயர்கள் சேர்ப்பு

  • மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் 13 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெயர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

இந்தியா

இந்திய – சீன எல்லையில் உள்ள காஷ்மீர் ராணுவ முகாமில் நிர்மலா சீதாராமன்
ஆய்வு

  • காஷ்மீர் மாநிலம் லடாக் மலைப் பகுதியில் இந்திய, சீன எல்லையான தோய்சி ராணுவ முகாமுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் சென்றார். அங்கு வீரர்களை உற்சாகப்படுத்திய அமைச்சர், எல்லை
    பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார்.

ஆயுர்வேத மருந்து தயாரிப்பில் பசு கோமியத்துக்கு முக்கியத்துவம்: உத்தரபிரதேசஅரசு அறிவிப்பு.

  • ஆயுர்வேத மருத்துவத்தில் பசு கோமியமும் ஒருங்கிணைந்த பகுதியாக விளங்குகிறது. கோமியம் உட்பட பசுவிடமிருந்து கிடைக்கும் பல்வேறு பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட 8 மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன.
  • கோமியம்,பால், நெய்உள்ளிட்ட பசுவின் பொருட்கள் மிகவும் பயனுள்ளவை என புதிய ஆய்வுகளும் கூறுகின்றன.

மத்திய அரசில் 2.53 லட்சம் பேர் கடந்த 2 ஆண்டுகளில் நியமனம்: மத்திய பொது பட்ஜெட்டில் தகவல்

  • கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் நிலவரப்படி மத்திய அரசு துறைகளில் பணியாற்றுவோர் எண்ணிக்கை 32.52 லட்சமாக இருந்தது.அதைவிட வரும் மார்ச் 1-ம் தேதிக்குள் 2.53 லட்சம் பேர் கூடுதலாக நியமிக்கப்படுவார்கள்.

தனிநபர் வருமான வரி உயர்ந்தவுடன், கார்ப்பரேட் வரி குறைக்கப்படும்: ஹஸ்முக் அதியா தகவல்

  • தனிநபர் வருமான வரி வசூல் உயர்ந்து வருவதாக மத்திய அரசு எண்ணும்போது, கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் என்று மத்திய நிதித்துறைச் செயலாளர் ஹஸ்முக் அதியா தெரிவித்தார்.

தமிழகத்தில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப் படவில்லை: தர்மேந்திர பிரதான் விளக்கம்

  • தமிழகத்தில் மீத்தேன்,ஹைட்ரோ கார்பன் மற்றும் ஷேல் காஸ் திட்டம் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார்.

செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுவோர் உரிமம் நிரந்தர ரத்து: மம்தா அரசு உத்தரவு

  • செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுவோரின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்று மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அரசு உத்தரவிட்டுள்ளது. மீண்டும் அவர்களுக்கு உரிமம் அளிக்காததுடன், அபராதம் இட்டு ஆறு மாதம் வரை சிறை தண்டனையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் வருமான வரியை தாங்களே செலுத்துங்கள்:
பஞ்சாப் முதல்வர் அறிவுறுத்தல்

  • அனைத்து எம்எல்ஏ, அமைச்சர்களுக்கும் மாநில அரசு வருமான வரி செலுத்தி வருகிறது. ஆனால், மாநில அரசு மிகவும் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதால், வேறுவழியின்றி இந்த நடவடிக்கையை முதல்வர் அமரிந்தர் சிங் எடுக்க உள்ளார்.

மாணவர்களின் தேர்வு பயம் போக்க மோடி எழுதிய புத்தகம் டெல்லியில்
வெளியிடப்பட்டது

  • தேர்வுகளை மாணவர்கள் பண்டிகை கொண்டாட்டங்கள் போல கருத வேண்டும் என்று அவர் கூறிய அறிவுரை நாடு முழுவதும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோரை ஊக்கப்படுத்துவதாக அமைந்திருந்தது.
  • இதையடுத்து, மோடி மாணவர்களுக்காக ஆற்றிய உரைகளின் தொகுப்பை டெல்லியில் உள்ள பெங்குவின் ரேண்டம் அவுஸ் பதிப்பகம் என்ற ‘எக்சாம் வாரியர்ஸ்’ (தேர்வு வீரர்கள்) தலைப்பில் புத்தகமாக வெளியிட்டு உள்ளது.

உலகம்

லஞ்சம் கொடுத்த வழக்கில் சிறை தண்டனை பெற்ற சாம்சங் தலைவர் விடுவிப்பு

  • முன்னாள் தென்கொரிய அதிபருக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சிறை தண்டனை பெற்ற சாம்சங் தலைவர் ஜே ஓய் லீ விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

சீன பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற 81 வயது பெண்

  • தியான்ஜின் பல்கலைக்கழகத்தில் இ-காமர்ஸ் படித்து டிப்ளமோ பட்டம் பெற்றார்.
  • கடந்த 2014-ம் ஆண்டு தனது 77 வது வயதில் பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனம் மூலம் இப்படிப்பை தொடங்கினார்.
  • கடந்த 4 ஆண்டுகளாக தீவிர முயற்சியின் மூலம் படித்து பட்டம் பெற்றுள்ளார்.
    பட்டத்தை நேரில் சென்று ஷியூமின்சூ பெற்றுக் கொண்டார்.

வணிகம்

நீண்டகால மூலதன ஆதாய வரியால் அரசுக்கு ரூ.40,000 கோடி கிடைக்கும்:
நிதித்துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா தகவல்

  • பங்குகள் மூலம் கிடைக்கும் நீண்டகால மூலதன ஆதாய வரியால் 2019-20-ம் நிதி ஆண்டில் ரூ.40 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கும் என நிதித்துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா தெரிவித்திருக்கிறார்.

7 ஆயிரம் பெரும் பணக்காரர்கள் இந்தியாவில் இருந்து வெளியேறி இருக்கின்றனர்

  • கடந்த ஆண்டில் இந்தியாவில் இருந்து 7,000 பெரும் பணக்காரர்கள் வெளியேறி இருக்கின்றனர். நியூ வெர்ல்ட் வெல்த்நிறுவனம் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

“ஜீரோ டிஃபெக்ட், ஜீரோ எஃபெக்ட்” மத்திய அரசின் சான்றிதழ் திட்டம்

  • குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்காக மத்திய அரசின் ஜீரோ டிபெக்ட், ஜீரோ எபெக்ட் சான்றிதழ் திட்டத்தை ( zero defect, zero effect certification scheme) குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது

விளையாட்டு

லலித்மோடி பெயரில் இயங்கும் பிசிசிஐ இணையதளம்: பணம் செலுத்தாததால் பல மணி நேரம் முடங்கியது

  • உலகிலேயே மிகவும் பணக்கார கிரிக்கெட் வாரியமாக திகழும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்(பிசிசிஐ) இணையதளம், டிவி ஆகியவற்றின் உரிமம் புதுப்பிக்கப்படாததால் பல மணிநேரம் முடங்கியது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!