பிப்ரவரி 3 நடப்பு நிகழ்வுகள்

0

தமிழகம்

மீதமாகும் உணவை ஏழைகளுக்கு வழங்கும் திட்டம்: சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடக்கம்

  • சென்னையில் உள்ள உணவு தயாரிப்பு நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் மீதமாகும் உணவை சேகரித்து ஏழைகளுக்கு வழங்கும் திட்டத்தை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று தொடங்கிவைத்தார்.
  • சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்புத் துறையின் நடமாடும் உணவு ஆய்வக வாகனத்தையும் அமைச்சர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னையில் அறிமுகம் போக்குவரத்து போலீசாரின் சட்டையில் கேமரா

  • போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இடையே வேறுபாடுகளை களையவும், நல்லிணக்கத்தை மேம்படுத்தவும் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளுக்கு சட்டையில் பொருத்துவதற்காக கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது.
  • முதல்கட்டமாக சோதனை அடிப்படையில் 4 கேமராக்கள் தேனாம்பேட்டை, மெரினா, கோயம்பேடு மற்றும் பூக்கடை போக்குவரத்து காவல்நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆதிச்சநல்லூரில் எடுத்த பொருட்களை பரிசோதனை செய்ய நிதி ஒதுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

  • ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை கார்பன் பரிசோதனை செய்ய போதுமான நிதி ஒதுக்க தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பழனி அருகே கிடைத்த பழங்கால ஓலைச்சுவடியில் நோய் தீர்க்கும் காவடி, முருகன் பக்திப் பாடல்கள்

  • திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கிடைத்த பழங்கால ஓலைச்சுவடியில் காவடி எடுத்தால் தீரும் நோய்கள் மற்றும் முருகனின் காவடி சிந்துப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

மருத்துவக் கல்வி இயக்குநராக மீண்டும் எட்வின் ஜோ-வை நியமிக்க முடிவு: உயர்நீதிமன்றத்தில் மாநில அரசு தகவல்

  • தமிழக மருத்துவக் கல்வி இயக்குநராக மீண்டும் எட்வின் ஜோவை நியமிக்க முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்தது

12 மாவட்டங்களில் நடமாடும் நூலகங்கள்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

  • தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் அறிவுத் திறனை மேம்படுத்துவதற்காக 12 மாவட்டங்களில் நடமாடும் நூலகங்கள் அமைக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

இந்தியா

பட்ஜெட் 2018: சமூக வலைத்தளங்களைக் கண்காணிக்கும் மத்திய அரசு!

  • வியாழனன்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது பட்ஜெட் உரையை தொடங்க எழுந்து நின்றவுடனேயே மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பட்ஜெட் என்ற பெயரில் வெளிவரும் சமூக வலைத்தள எதிர்வினைகளைக் கண்காணிக்க சிறு குழு ஒன்றை அமைத்தார்.

நாடு முழுவதும் 10 கோடி குடும்பங்கள் பயன்பெறும் மருத்துவக் காப்பீடு திட்டம்: ஆகஸ்ட் 15-ம் தேதி அமல்

  • மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ‘தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம்’ வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி அமல் செய்யப்படும். இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்காக ஓராண்டுக்கு ரூ.11,000 கோடி செலவாகும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.

சென்னை-பெங்களூரு இடையே ராணுவ தளவாட தொழிற்பாதை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தகவல்

  • நாட்டிலேயே முதல் ராணுவ தளவாட தொழிற்பாதை சென்னை-பெங்களூரு இடையே அமைக்கப்படும் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

2005ம் ஆண்டுக்கு முன்பு பிறந்த மகளுக்கும் தந்தையின் சொத்தில் உரிமை உண்டு: உச்ச நீதிமன்றம்

  • இந்து வாரிசுரிமைச் சட்டம் 2005ன்படி, அனைத்துப் பெண்களுக்கும் தங்கள் குடும்பத்தின் சொத்தில் பங்கு பெறும் உரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் இன்று மிக முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஆதார் தகவல்கள் பாதுகாப்பானவை: ரவிசங்கர் பிரசாத்

  • ‘ஆதார் விவரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளன; தகவல் கசிவு எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை’ என்று மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

அசாம் மாநிலத்தில் ரூ.2500 கோடி முதலீடு – 80 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு: முகேஷ் அம்பானி அறிவிப்பு

  • அசாம் மாநிலத்தில் 2500 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய தொழில்கள் தொடங்கி 80 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்போவதாக ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

உலகம்

அதி நவீன ரகசிய மின்காந்த ரெயில் துப்பாக்கி பொருத்திய சீன போர்க்கப்பல்

  • வாஷிங்டன் உலகின் முதல் மின்காந்த ரெயில் துப்பாக்கியை ( ஏவுகணையை செலுத்த ) பொருத்திய போர்க்கப்பலை சீன கொண்டு உள்ளது. அமெரிக்கா உள்பட மேற்கு நாடுகளில் உருவாக்கப்பட்ட எந்தவொரு உபகரணங்களையும்விட இது அதிக சக்தி வாய்ந்ததாகும்.
  • சீன இராணுவம் ஸ்டார் வார்ஸ் பாணியிலான ஆயுதத்தை பரிசோதிக்கிறது. ஆன்லைனில் ஆபத்தான இந்த ஆயுதத்தின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. மின்காந்த சக்தி ரெயில் துப்பாக்கியால் நம்பமுடியாத அதிக வேகங்களில் மற்றும் நிண்ட தூரத்திற்கு பொருள்களை ஏவுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத்த நேபாள அதிபர், பிரதமருடன் சுஷ்மா பேச்சுவார்த்தை

  • இந்தியா – நேபாளம் நாடுகளுக்கு இடையே உறவை மேலும் வலுப்படுத்த, நேபாள அதிபர், பிரதமர் மற்றும் முக்கிய தலைவர்களுடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.

வணிகம்

கோவை கொடிசியா வளாகத்தில் சர்வதேச கட்டிட கட்டுமான பொருட்கள் கண்காட்சி தொடங்கியது: பல்வேறு நாடுகள் பங்கேற்பு: ரூ.100 கோடிக்கு வர்த்தகம் எதிர்பார்ப்பு

  • கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் சர்வதேச அளவிலான கட்டிட கட்டுமானப் பொருட்கள் கண்காட்சி – ‘பில்டு இன்டெக் 2018’ நேற்று தொடங்கியது. கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் சார்பில் நடைபெறும் இந்தக் கண்காட்சியை கோன் எலிவேட்டர் இந்தியா நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் அமித் கோசைன் தொடங்கி வைத்தார்.

இண்டர்நெட் டவுன்லோடு வேகம்: தொடர்ந்து முதலிடத்தில் ரிலையன்ஸ் ஜியோ

  • மொபைல் இண்டர்நெட் டேட்டா டவுன்லோடு வேகத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நவம்பர் மாதமும் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
  • பல்வேறு தொலைபேசி சேவை நிறுவனங்களும் வழங்கி வரும் இணையதள டேட்டா டவுன்லோடு மற்றும் அப்லோடு வேகம் மைஸ்பீடு (MySpeed) எனும் செயலி கொண்டு கணக்கிடப்படுகிறது.

விளையாட்டு

யு-19 கிரிக்கெட்: இந்திய அணி வரலாற்று சாதனை; 4-வது முறையாக உலகக் கோப்பையை வென்றது

  • 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.
  • இதற்குமுன் எந்த அணியும் 4முறை உலகக் கோப்பையை வென்றது இல்லை என்ற வரலாற்றை மாற்றி எழுதி இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!