பிப்ரவரி 22 நடப்பு நிகழ்வுகள்

0

தமிழகம்

ஜி சாட் 11 செயற்கைக்கோள் ஏப்ரலில் விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

இஸ்ரோவின் மிகப்பெரிய தயாரிப்பான ஜி சாட் 11 செயற்கைக்கோள் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்தார்.

கூகுள் தேடுபொறியில் இனி தமிழிலும் விளம்பரம் செய்யலாம்

 • இணையத்தில் முன்னணி தேடுபொறியாக விளங்கும் கூகுள் நிறுவனம், பல்வேறு விளம்பரங்களையும் தனது தளத்தில் வெளியிடுகிறது. இதற்காக ‘கூகுள் ஆட்சென்ஸ்’, ‘கூகுள் ஆட்வேர்ட்ஸ்’ போன்ற சேவை நிறுவனங்களை கூகுள் நிறுவனம் பயன்படுத்தி வருகிறது.
 • இதில் விளம்பரங்கள் அனைத்தும் பெரும்பாலும் ஆங்கிலம் மற்றும் சில பிராந்திய மொழிகளில் மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தியாவை பொறுத்தவரை இந்தி, பெங்காலி மொழிகளில் மட்டுமே இதுவரை விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வந்தன.
 • விளம்பரங்களை வெளியிடும் வாய்ப்பை கூகுள் நிறுவனம் வழங்கி உள்ளது. உலக தாய்மொழி தினத்தையொட்டி இந்த வசதியை கூகுள் நிறுவனம் அறிவித்து உள்ளது.

1, 9–ம் வகுப்பு புதிய பாடத்திட்ட புத்தகத்துக்கான சி.டி. அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிட்டார்

 • 1, 9–ம் வகுப்பு மாணவர்களுக்காக புதிய பாடத்திட்டத்தின்படி உருவாக்கப்பட்ட தமிழ், ஆங்கிலம் பாடபுத்தகத்துக்கான சி.டி.யை பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தலைமைச் செயலகத்தில் நேற்று வெளியிட்டார்.
 • தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையில் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அரசின் புதிய பாடத்திட்டத்தின்படி 1,6,9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் புத்தகமாக உருவாக்கப்பட வேண்டும்.
 • முதல்கட்டமாக, 1 மற்றும் 9–ம் வகுப்புக்கான தமிழ், ஆங்கில பாடங்கள் அடங்கிய பாடநூல்களின் முதல் பாகம் முழுமையாக முடிக்கப்பட்டு, அதை அச்சிடும் பணிக்காக சி.டி. தயாரிக்கப்பட்டுள்ளது.

தமிழக புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹு நியமனம்

தமிழக புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக  சத்யபிரதா சாஹு நியமனம்  செய்யப்பட்டுள்ளார்.  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு பதில் நியமனம் செய்யபப்ட்டுள்ளார். சத்யபிரதா சாஹு  1997 தமிழ்நாடு ஐஏஎஸ் பிரிவை சேர்ந்தவர் . சத்யபிரதா சாஹு தற்போது சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாக இயக்குநராக உள்ளார். இவர் தமிழக அரசில் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவர்.

இந்தியா

புந்தேல்கண்ட் பகுதியில் பாதுகாப்பு தொழில்துறை மண்டலம்: ரூ.20,000 கோடி முதலீடு செய்யப்படும்- தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் பிரதமர் மோடி அறிவிப்பு

புந்தேல்கண்ட் பகுதியில் பாதுகாப்பு தொழில்துறை மண்டலம் அமைக்கப்படும். இதற்காக ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும். இதன்மூலம் 2.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

உலக ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 81வது இடம்

 • உலக அளவில் ஊழல் நாடுகளின் பட்டியலில் இந்தியா 81வது இடத்தில் உள்ளது. 2017 ம் ஆண்டில் ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலை “டிரான்பரன்சி இன்டர்நேஷனல்” வெளியிட்டுள்ளது.
 • மொத்தம் 180 நாடுகளைக் கொண்ட இந்த பட்டியலில், பொதுத்துறையில் ஊழல் அதிகம் நிறைந்த நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. 2016 ம் ஆண்டில் ஊழல் அதிகம் நிறைந்த 176 நாடுகளின் பட்டியலில் இந்தியா 79வது இடத்தில் இருந்தது. 2017 ம் ஆண்டில் 180 ஊழல் நாடுகளின் பட்டியலில் இந்தியா 81வது இடம் வகிக்கிறது.

போர் விமானத்தை தனியாக ஓட்டி சாதனை படைத்த முதல் இந்திய பெண் விமானி

 • இந்தியாவில் முதன்முறையாக போர் விமானத்தை தனியாக ஓட்டி விமானப்படை பெண் அதிகாரி அவனி சதுர்வேதி சாதனை படைத்துள்ளார்.
 • இந்திய விமானப்படையில் பெண்கள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு போர் விமானங்களை இயக்குவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பல கட்ட பயிற்சிக்கு பின் அவர்கள் குழுவாக தேர்வு செய்யப்பட்டு தனியாக விமானத்தை இயக்குவதற்கான பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.

உலகம்

முழு தானியங்கியாக மாற்ற பயன்படுத்தப்படும் ‘பம்ப் ஸ்டாக்ஸ்’ துப்பாக்கி உதிரிபாகத்துக்குத் தடை: அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிரடி நடவடிக்கை

‘‘பாதி தானியங்கி துப்பாக்கியை, முழு தானியங்கி துப்பாக்கியாக மாற்ற பயன்படுத்தப்படும் ‘பம்ப் ஸ்டாக்ஸ்’ என்ற உதிரி பாகத்துக்கு அமெரிக்காவில் தடை விதிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

நவாஸ் ஷெரீப் கட்சித் தலைவர் பதவியும் பறிப்பு: பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு

முறைகேடாக சொத்து சேர்த்த புகாரில் பதவி இழந்த முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வகித்து வரும் கட்சித் தலைவர் பதவியை பறித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வணிகம்

வீட்டிலேயே ஐசியூ சிகிச்சை: பிலிப்ஸ் அறிமுகம்

 • தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளிகளுக்கு மருத்துவர்களின் ஒப்புதலோடு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கும் ஐசியூ அட் ஹோம் திட்டத்தை சென்னையில் பிலிப்ஸ் ஹெல்த்கேர் அட் ஹோம் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்திய பின் பிலிப்ஸ் ஹெல்த்கேர் அட் ஹோம் பிரிவின் வணிகப் பிரிவுத் தலைவர் ரிச்சா சிங் கூறியதாவது:
 • மூச்சுத்திணறலுக்கு வீட்டிலிருந்தே சிகிச்சை பெறும் சேவையை அளித்துவரும் பிலிப்ஸ் ஹெல்த்கேர் நிறுவனம் தீவிர மற்றும் நாள்பட்ட நோய்களுக்கும் வீட்டிலிருந்தே சிகிச்சை பெறும் வகையில் தனது சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது.

இந்திய ஆடியோ துறையில் நுழைகிறது தோஷிபா

ஜப்பானைச் சேர்ந்த தோஷிபா நிறுவனத்தின் துணை நிறுவனமான தோஷிபா கல்ஃப் எஃப் இசட் இ,தோஷிபா லைஃப் ஸ்டைல் எலக்ட்ரானிக்ஸ் உடன் இணைந்து ஆடியோ சாதனங்கள் மற்றும் அதன் உதிரிபாகங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!