பிப்ரவரி 2 நடப்பு நிகழ்வுகள்

1

தமிழகம்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.16 கோடியில் வில்லிவாக்கம் ஏரியை சீரமைக்க மாநகராட்சி திட்டம்

  • சென்னை மாநகரப் பகுதியில் உள்ள பெரிய ஏரிகளில் வில்லிவாக்கம் ஏரியும் ஒன்று. இது மொத்தம் 36.50 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியின் ஒரு பகுதியில் சென்னை குடிநீர் வாரியம் நீரேற்று நிலையம் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்துள்ளது.
  • கடந்த 2015-ம் ஆண்டு சென்னை மாநகரப் பகுதியில் உள்ள நீர் ஆதாரங்களைப் பாதுகாக்கும் விதமாக, குடிநீர் ஆதாரம் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் வில்லிவாக்கம் ஏரியை ரூ.16 கோடியில் சீரமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

தில்லி தமிழ்நாடு இல்லத்துக்கு பெயர் மாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு

  • தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு வைகை தமிழ் இல்லம் மற்றும் பொதிகை தமிழ் இல்லம் என வெள்ளிக்கிழமை பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்தியா

பட்ஜெட் 2018: விவசாயிகளுக்கு உதவ கோபர்-தன் திட்டம்

  • கிராமங்களில் திறந்தவெளியில் மலம் கழிப்பதைத் தடுக்க கழிப்பறைகளை மத்திய அரசு கட்டி வருகிறது. கால்நடைகளின் சாணத்தை உரமாக்கவும், மறுசுழற்சி மூலம் அதைப் பயன்படுத்தும் திட்டத்தையும் திடக் கழிவுகளை பயோ-கேஸ் மற்றும் பயோ-இயற்கை எரிவாயுவாக மாற்றும் கோபர்-தன் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
  • நமாமி கங்கே எனப்படும் திட்டத்தின் கீழ் 187 திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இவற்றில் ரூ.16,713 கோடியில் ஊரக சுகாதார மேம்பாடு உள்ளிட்ட திட்டங்கள் அடங்கும். கங்கைக் கரையில் 4,465 கிராமங்களில் திறந்தவெளி மலம் கழிப்பதைத் தடுக்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆரோவில் உதய தின விழாவில் பங்கேற்க பிப்.28ல் புதுச்சேரி வருகிறார் பிரதமர் மோடி

  • ஆரோவில் உதய தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி பிப்.28ல் புதுச்சேரி வர உள்ளதாக அம்மாநில பாஜக தலைவர் சாமிநாதன் கூறியுள்ளார்

தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம் அக்டோபர் 2-ம் தேதி தொடங்கப்படும் என தகவல்

  • பட்ஜெட்டில் அறிவித்துள்ள தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம் அக்டோபர் 2-ம் தேதி தொடங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பட்ஜெட் 2018: தனிநபர் ஆதார் எண் போல நிறுவனங்களுக்கு அடையாள எண் – மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தகவல்

  • தனி நபர்களுக்கான ஆதார் எண்ணைப் போல, தொழில் நிறுவனங்களுக்கும் தனித்துவ அடையாள எண் வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
  • ஆதார் எண் ஒவ்வொரு இந்தியருக்கும் தனி அடையாளத்தை வழங்குகிறது. அரசின் நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பொது சேவைகளை உரியவர்களுக்கு வழங்குவதை ஆதார் எண் எளிமையாக்கி உள்ளது. இதன்மூலம் முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளன.
  • நாடு முழுவதும் உள்ள சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களை அடையாளம் காண்பதற்காக தனித்துவ அடையாள எண் வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. இதன் மூலம் நிறுவனங்களின் செயல்பாட்டை கண்காணிப்பது சுலபமாகும். இதுவரை நாடு முழுவதும் 119 கோடி பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு எதிரான பீட்டா வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு

  • ஜல்லிக்கட்டு போட்டிகளை நிரந்தமாக நடத்த ஏதுவாக தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு எதிராக விலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா’ தொடர்ந்த வழக்கை, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் இன்று (வெள்ளி) உத்தரவு பிறப்பித்துள்ளது.

வணிகம்

பட்ஜெட் 2018: பிட்காயின் பரிவர்த்தனை சட்ட விரோதம் என அறிவிப்பு

  • பிட்காயின் உள்ளிட்ட அனைத்து வகையான கிரிப்டோ கரன்ஸிகளின் பரிவர்த்தனையும் சட்ட விரோதமாகும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நேற்று தன்னுடைய பட்ஜெட் உரையில் தெரிவித்தார். கடந்த பட்ஜெட் உரையில், கிரிப்டோகரன்ஸிகளுக்கு இந்தியாவில் விதிமுறைகள் உருவாக்கவில்லை. கிரிப்டோகரன்ஸிகளின் பரிவர்த்தனைக்கு ஏதுவாக எந்த நிறுவனங்களும் ரிசர்வ் வங்கியின் அனுமதியை பெறவில்லை என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

விளையாட்டு

இந்திய ஓபன் குத்துச்சண்டை தொடர்: தங்கப் பதக்கம் வென்றார் மேரி கோம்

  • இந்திய ஓபன் குத்துச்சண்டை தொடரில் இந்திய வீராங்கனை மேரி கோம் தங்கப் பதக்கம் வென்றார்.டெல்லியில் நடைபெற்ற இந்தத் தொடரில் கடைசி நாளான நேற்று மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம், பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜோசி காபுகோவை எதிர்த்து விளையாடினார்.
  • இதில் மேரி கோம் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார். 64 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிவிலோவோ பாசுமட்டரி 3-2 என்ற கணக்கில் தாய்லாந்தின் சுடபோன் சீசன்டியை வீழ்த்தி தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.

‘எ செஞ்சுரி ஈஸ் நாட் இனஃப்’- புத்தகம் வெளியிடும் சௌரவ் கங்குலி

  • தனது கிரிக்கெட் வாழ்வில் ஏற்பட்ட அனைத்து சம்பவங்களையும் தொகுத்து புத்தகமாக வெளியிடுகிறார் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி.

 Current Affairs Download

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!