பள்ளி, கல்லூரிகளுக்கு பிப்ரவரி 23 (நாளை) வரை விடுமுறை – கல்வித்துறை உத்தரவு!

0
பள்ளி, கல்லூரிகளுக்கு பிப்ரவரி 23 (நாளை) வரை விடுமுறை - கல்வித்துறை உத்தரவு!
பள்ளி, கல்லூரிகளுக்கு பிப்ரவரி 23 (நாளை) வரை விடுமுறை - கல்வித்துறை உத்தரவு!
பள்ளி, கல்லூரிகளுக்கு பிப்ரவரி 23 (நாளை) வரை விடுமுறை – கல்வித்துறை உத்தரவு!

கர்நாடகா மாநிலத்தின் ஷிவமொக்கா நகரில் பிப்ரவரி 23ம் தேதியான நாளை வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்படும் என்று துணை ஆணையர் செல்வமணி ஆர் அறிவித்தார்.

கல்வித்துறை அறிவிப்பு:

கர்நாடகாவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பிப்ரவரி 16 அன்று முதல் திறக்கப்பட்டது. இருப்பினும், ஹிஜாப் விவகாரம் தொடர்பான போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த பகுதிகளில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. சில கல்வி நிறுவனங்கள் ஹிஜாப் அணிந்த மாணவர்களின் நுழைவுக்கு தடை விதித்ததையடுத்து, பரிந்துரைக்கப்பட்ட சீருடைகள் மட்டுமே வளாகத்திற்குள் அனுமதிக்கப்படும் என்று கர்நாடகாவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நகரில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் நடவடிக்கையாக 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – எச்சரிக்கை பதிவு!

ஷிவமொக்கா பள்ளிகள், கல்லூரிகள் பிப்ரவரி 21 ஆம் தேதி மூடப்படும் என்று துணை ஆணையர் செல்வமணி ஆர் அறிவித்தார். மேலும், பிப்ரவரி 23 வரை நகரில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பஜ்ரங் தள ஆர்வலர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார். அதன்பிறகு தான் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதற்கட்ட உத்தரவின்படி இரண்டு நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சூழ்நிலையைப் பொறுத்து நகரத்தில் பள்ளி, கல்லூரி மூடல் நீட்டிக்கப்படலாம். இருப்பினும், அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

PF பணத்தை ஆன்லைனில் திரும்ப பெறுவது எப்படி? எளிய வழிகாட்டுதல்கள் இதோ!

கல்வி நிறுவனங்களை மூடுவதுடன், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் நகரில் 144 தடை உத்தரவையும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று நம்பிக்கை இருப்பதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார். கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, மக்கள் அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், மக்கள் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!