பிப்ரவரி 24 & 25 நடப்பு நிகழ்வுகள்

0

தமிழகம்

ஜெயலலிதாவின் 70-வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஸ்கூட்டர் மானியம் வழங்கும் திட்டம்: பிரதமர் மோடி இன்று தொடங்குகிறார்- 70 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியையும் தொடங்கி வைக்கிறார்

 • முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, பெண்களுக்கு இருசக்கர வாகன மானியம் வழங்கும் திட்டம் மற்றும் 70 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில் 24.02.2018 அன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.
 • இதுதவிர, கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஜெயலலிதா பிறந்த தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி, இந்தாண்டு 70 லட்சம் மரக்கன்றுகள் நடப் படுகின்றன.

சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 32 நீர்நிலைகளை சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை: ரூ.16 கோடியில் பணிகள் விரைவில் தொடக்கம்

 • சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 32 நீர்நிலைகளை ரூ.16 கோடி செலவில் சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
 • சென்னையில் உள்ள நீர்நிலைகளைச் சீரமைக்கும் விதமாக மாநகராட்சி முழுவதும் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், மாநகராட்சி எல்லையில் மொத்தம் 145 ஏரிகள், குளங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றை பல்வேறு கட்டங்களாக சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர 2 லட்சம் பேர் விண்ணப்பம்

 • கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர இணையதளத்தில் 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
 • நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை கடந்த 21-ம் தேதி தொடங்கினார். இந்த கட்சிக்காக மய்யம்.காம் (www.maiam.com) என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் தொடங்கப்பட்டது. கட்சியில் சேர விரும்புவோர், மய்யம் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கும்படி கமல் அழைப்பு விடுத்திருந்தார்.
 • இந்தியா, அமெரிக்கா, அரபு நாடுகள், சிங்கப்பூர், இங்கிலாந்து, மலேசியா , சவுதி அரேபியா, கனடா ஆகிய நாடுகளில் வசிப்பவர்கள் மய்யம் இணையதளத்தை பார்வையிட்டு கட்சியில் உறுப்பினராக சேர்ந்துள்ளனர்.

பிளஸ் 1 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு முன்னேற்பாடு: திருவள்ளூரில் 113 மையங்கள் அமைப்பு- 87,052 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்

 • இந்த ஆண்டுக்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் மார்ச் 1-ம் தேதி முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரையிலும், 11-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 7-ம் தேதி முதல் ஏப்ரல் 16-ம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளன.
 • பிளஸ் 1 மற்றும் 12-ம் வகுப்பு அரசுத் தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஏ.சுந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது.
 • இதில், வருவாய்த் துறை, காவல்துறை, போக்குவரத்துத் துறை, மின்வாரியத் துறை மற்றும் கல்வித் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

இந்தியா

58 எம்.பி. பதவிகளுக்கு மார்ச் 23-ல் தேர்தல்

 • ஆந்திரா -3, தெலங்கானா- 3, கர்நாடகா -4, பிஹார் -6, சத்தீஸ்கர் -1, குஜராத் -4, ஹரியாணா -1, இமாச்சல பிரதேசம்-1, மத்திய பிரதேசம்- 5, மகாராஷ்டிரா- 6, உத்தர பிரதேசம்- 10, உத்தராகண்ட்-1, மேற்கு வங்கம்-5, ஒடி சா- 3, ராஜஸ்தான்-3, ஜார்க்கண்ட்-2 ஆகிய 16 மாநிலங்களைச் சேர்ந்த 58 மாநிலங்களவை எம்பி பதவிக்கு வரும் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
 • கேரள ஐக்கிய ஜனதா தளம் கட்சி மாநிலங்களவை எம்பி வீரேந்திரகுமார், தனது பதவியை ராஜினாமா செய்ததால், அதற்கும் சேர்த்து 23-ல் இடைத்தேர்தல் நடக்கிறது.

 உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

 • ஊழலை ஒழிக்க வகை செய்யும் லோக்பால் அமைப்பை உருவாக்க தேர்வு கமிட்டி வரும் மார்ச் 1-ம் தேதி கூடுகிறது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பள்ளிகளில் காயத்ரி மந்திரம் கட்டாயம்: ஹரியாணா அரசு உத்தரவு

 • ஹரியாணா மாநில பள்ளிகளில் பிப்ரவரி 27ம் தேதி முதல் காயத்ரி மந்திரத்தை கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பிக்கபடும் என அம்மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராம் பிலாஸ் சர்மா கூறியுள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி: நிரவ் மோடியின் ரூ. 523 கோடி சொத்து ஒரே நாளில் முடக்கம்

 • பஞ்சாப் நேஷனல் வங்கியில் சட்டவிரோத பண பரிவர்த்தனை புகாரில் சிக்கிய நிரவ் மோடிக்கு சொந்தமான 523 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறையினர் இன்று முடக்கினர்.

உலகம்

சிரியாவில் 30 நாள் போர் நிறுத்தம் கொண்டுவர தடுமாறும் ஐ.நா.

 • சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியான கவுடாவில் கடந்த ஐந்து நாட்களாக சிரிய – ரஷ்ய கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அவர்களில் 90க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள்.
 • போர் நிறுத்தத்தைக் கொண்டு வர ரஷ்யா தாமதிப்பதாக ரஷ்யா மீது ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர்களாக உள்ள பிற நாடுகள் குற்றம் சாட்டின.
 • இந்த நிலையில் இதற்கான வாக்கெடுப்பு  நியூயார்க்கில் நடைபெற்றது.

மார்ச் 13-ம் தேதி நேபாளத்தில் அதிபர் தேர்தல்

 • நேபாளத்தில் கடந்த டிசம்பரில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடந்தது. இதில் இடதுசாரி கூட்டணி வெற்றி பெற்றது.
 • இதைத் தொடர்ந்து நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சர்மா ஒளி பிரதமராக பதவியேற்றார்.

வடகொரியாவுக்கு விதிக்கப்பட்ட தடையை மீறும் சரக்கு கப்பலை வழிமறித்து சோதனையிட அமெரிக்கா முடிவு

 • வடகொரியாவுடன் வர்த்தகம் செய்ய விதிக்கப்பட்ட தடை மீறப்படுவதை கண்காணிக்க, சரக்கு கப்பல்களை இடைமறித்து சோதனையிட அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
 • ஐநா பாதுகாப்பு கவுன்சில் மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து, அந்த நாட்டுக்கு ஐநா பொருளாதார தடை விதித்துள்ளது.

வணிகம்

15 இந்திய மொழிகளில் இ-மெயில் முகவரி: மைக்ரோசாப்ட் அறிவிப்பு

 • உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட், இந்திய மொழிகளில் இமெயில் முகவரி உள்பட பல்வேறு சேவைகளை வழங்க உள்ளது. இது தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
 • மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் உள்ள 15 உள்ளூர் மொழிகளில் இ-மெயில் முகவரி, ஆபிஸ் 365, அவுட்லுக் 2016, அவுட்லுக் டாட் காம், ஆன்லைன் மற்றும் ஆப்லைன் பரிமாற்றங்களுக்கு உள்ளூர் மொழிகளைப் பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளது.

வங்கிகளை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை: நிதி அமைச்சர் அருண் ஜேட்லி திட்டவட்டம்

 • பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிகழ்ந்துள்ள நிதி முறைகேடு குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, தேவைப்பட்டால் சட்ட விதிமுறைகள் மேலும் கடுமையாக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
 • இதற்காக வங்கிகளை தனியார்மயமாக்கும் யோசனை ஏதும் அரசுக்குக் கிடையாது என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

விளையாட்டு

ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி

 • ஹாமில்டனில்  நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி இங்கிலாந்து அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை அருணா ரெட்டிக்கு வெண்கலம்: சர்வதேச போட்டியில் முதல் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை

 • ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் இந்திய வீராங்கனை அருணா புத்தா ரெட்டி வெண்கலம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் 2 தங்கம் வென்று செக். குடியரசு வீராங்கனை எஸ்டர் சாதனை

 • குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் செக். குடியரசு வீராங்கனை எஸ்டர் லெடேக்கா 2 தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!