பிப்ரவரி 23 நடப்பு நிகழ்வுகள்

0

தமிழகம்

மானிய விலை ஸ்கூட்டர் வாங்க ஹெல்மெட் வைத்திருப்பது கட்டாயம்: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

 • தமிழகத்தில் பணியில் உள்ள பெண்களுக்கு ஐஎஸ்ஐ தரச்சான்று பெற்ற ஹெல்மெட் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே 50 சதவீத மானிய திட்டத்தின்கீழ் இரு சக்கர வாகனம் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் தமிழ் மக்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்

 • இலங்கை அரசின் சார்பில் நல்லிணக்க தொலைக்காட்சி என்ற பெயரில் புதிய தமிழ் தொலைக்காட்சி தொடங்கப் பட்டுள்ளது.

ஜெயலலிதா உயிர் மாதிரி உள்ளதா?-அப்போலோ பதிலளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

 • ஜெயலலிதா மகள் என அம்ருதா எனபவர் உரிமை கோரும் வழக்கில் டிஎன்ஏ சோதனைக்காக ஜெயலலிதா உயிர் மாதிரி சேமித்து வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அப்போலோ நிர்வாகம் பதிலளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா

உலகின் மிகச் சிறிய பென்சிலை வடிவமைத்து உத்தரகாண்டைச் சேர்ந்தவர் சாதனை

 • உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹல்த்வானி மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் சந்திர உபாத்யாய. இவர் ஒரு நுண்கலை கலைஞர்.
 • இந்நிலையில் இவர் 5 மிமீ நீளமும் 0.5 மிமீ அகலமும் கொண்ட சிறிய அளவிலான பென்சிலை வடிவமைத்திருக்கிறார். ஒரு சிறிய மரத்துண்டில் இருந்து இந்த பென்சிலை அவர் செதுக்கியுள்ளார். அதனுள் ஹெ.பி. லெட்டையும் நுழைத்துள்ளார்.
 • இந்த பென்சிலை செய்து முடிக்க அவருக்கு 3 முதல் 4 நாட்கள் வரை ஆனதாகக் கூறுகிறார்.

நாகாலாந்தில் நிலையான அரசு அமைய வேண்டும்: பிரச்சாரத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

 • நாகாலாந்தில் வளர்ச்சித் திட்டங்கள் தொடர வலிமையான மற்றும் நிலையான அரசு அமைய வேண்டியது அவசியம் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.
 • நாகாலாந்து, மேகாலயா சட்டப்பேரவைகளுக்கு வரும் 27-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

மார்ச் 1 முதல் தேர்தல் பத்திரம் விநியோகம்

 • அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருவதற்காக, தேர்தல் நிதிப் பத்திரங்கள் என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தியது.
 • இந்த தேர்தல் நிதிப் பத்திரங்களை இந்தியக் குடிமக்கள் யார் வேண்டுமானாலும் வாங்கி, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கலாம்.
 • இந்த நிதியானது, குறிப்பிட்ட வங்கிக் கணக்கின் வாயிலாகவே செலுத்த முடியும் என்பதால், எந்தக் கட்சிகளுக்கு எவ்வளவு பணம் யார் மூலம் சென்றது என்பதை அறிந்துகொள்ள முடியும்.

உலகம்

அமெரிக்கா: 10 லட்சம் ஆசிரியர்களுக்கு துப்பாக்கிப் பயிற்சி

 • 10 லட்சம் ஆசிரியர்களுக்கு துப்பாக்கிப் பயிற்சி அளிக்க அமெரிக்கா தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 • இது தொடர்பாக வெள்ளை மாளிகை தரப்பில், “அமெரிக்காவின் கூட்டாட்சி அரசு  அமெரிக்கா முழுவதும் 10 லட்சம் ஆசிரியர்களுக்கு துப்பாக்கி பயிற்சி வழங்க நிதியை வழங்க தயாராகி வருகிறது” என்று கூறியுள்ளது.
 • அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்காவில் பள்ளி ஆசிரியர்களுக்கு துப்பாக்கி வழங்கப்படும் என்று கூறியதைத் தொடர்ந்து தற்போது இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

எச்-1பி விசா விதிமுறைகளை கடுமையாக்கியது அமெரிக்கா:

 • அமெரிக்க அரசு வெளிநாட்டு ஊழியர்களுக்கு எச்-1பி விசா வழங்குவதற்கு கடுமையான விதிமுறைகளை அறிவித்துள்ளது.
 • இதனால், இந்தியாவில் ஐடி நிறுவனங்கள், ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

வணிகம்

எக்யுரஸ் பங்குகளை வாங்கியது பெடரல் வங்கி

 • இன்வெஸ்ட்மெண்ட் பேங்கிங் பிரிவில் செயல்பட்டுவரும் எக்யுரஸ் கேபிடல் நிறுவனத்தின் 26% பங்குகளை பெடரல் வங்கி வாங்கி இருக்கிறது.

பாகிஸ்தான், இலங்கை, கஜகஸ்தானை விட இந்தியாவில் 4ஜி வேகம் குறைவு: ஆய்வில் தகவல்

 • பிரதமர் மோடியும், மத்திய அரசும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை வேகப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
 • இருப்பினும். இந்தியாவில் 4ஜி வசதி கூட சரிவர கிடைப்பதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான், கஜகஸ்தான், இலங்கையை விட இந்தியாவில் 4ஜி வேகம் மிக குறைவாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

விளையாட்டு

மகளிர் ஐஸ் ஹாக்கியில் அமெரிக்கா சாம்பியன்

 • தென் கொரியாவின் பியாங்சங் நகரில் 23-வது குளிர்கால ஒலிம்பிக் தொடர் நடைபெற்று வருகிறது.
 • இதில் நடைபெற்ற மகளிருக்கான ஐஸ் ஹாக்கி இறுதிப் போட்டியில் அமெரிக்கா – கனடா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் அமெரிக்கா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது.
 • சுமார் 20 ஆண்டு கால வரலாற்றில் அமெரிக்க மகளிர் அணி தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதன்முறை.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!