பிப்ரவரி 21 நடப்பு நிகழ்வுகள்

0

தமிழகம்

தமிழர் பண்பாடு, அடையாளத்தை காக்க தமிழை போற்றி வளர்ப்போம்உலக தாய்மொழி நாளில் முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

 • மக்கள் தங்கள் தாய்மொழியை போற்றி வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் யுனெஸ்கோ நிறுவனம் பிப்.21-ம் தேதியை உலக தாய்மொழி நாளாக அறிவித்துள்ளது.
 • ‘தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்ற பாரதிதாசன் பாடலுக்குகேற்ப, அமுதம் போன்ற இலக்கியச் செழுமையும், வலுவான இலக்கணக் கட்டமைப்பும் தன்னகத்தே கொண்டு தென்னக மொழிகளின் தாயாகவும், உலகிலேயே மிக வும் தொன்மை வாய்ந்த முதன் மொழியாகவும் விளங்கும் நம் தாய்மொழியாம் தமிழை இந்த நாளில் போற்றிடுவது நம் அனைவரின் கடமையாகும்.

மக்கள் நீதி மய்யம்கட்சிக்காக புது இணையதளம் தொடக்கம்

 • கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற தன் கட்சிக்காக மய்யம்.காம் என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை தொடங்கியுள்ளார்.

ஜி-சாட் 11 செயற்கைகோள் ஏப்ரல்-மே மாதத்தில் ஏவப்படும் – இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

 • இந்தியாவில் அதிவேக இண்டர்நெட் வசதியினை பெற ஏதுவாக ஏப்ரல் அல்லது மே மாதத்தில் 5.7 டன் எடை கொண்ட ஜி-சாட் 11 என்ற சாட்டிலைட் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.

இந்தியா

2,000 கி.மீ. தொலைவு இலக்கை தாக்கும் திறன் படைத்த அக்னி 2 ஏவுகணை சோதனை வெற்றி

 • அணு ஆயுதங்களை சுமந்தபடி 2 ஆயிரம் கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் திறன் படைத்த அக்னி -2 ஏவுகணை வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது.
 • இதுகுறித்து பாதுகாப்புத் துறை வட்டாரத்தினர், “ஒடிசா மாநில கடற்கரை அருகே அப்துல் கலாம் தீவில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தின் 4-வது ஏவுதளத்தில் இருந்து அக்னி-2 ஏவுகணை ஏவப் பட்டது.
 • இந்த சோதனை, குறிப்பிட்ட இலக்கை தாக்கி வெற்றி பெற்றது.

ஜார்க்கண்டின் இத்கோரி பகுதியில் ரூ.600 கோடி செலவில் உலகின் உயரமான புத்த ஸ்தூபிமுதல்வர் ரகுவர்தாஸ் தகவல்

 • ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ.600 கோடி செலவில் உலகின் மிக உயரமான புத்த ஸ்தூபி அமைக்கப்படும் என்று மாநில முதல்வர் ரகுவர் தாஸ் தெரிவித்தார்.

இந்தியாவின் முதல் பெண்கள் ரெயில் நிலையமானது ஜெய்ப்பூர் காந்தி நகர் ரெயில் நிலையம்

 • ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரில் உள்ள காந்தி நகர் ரெயில் நிலையம் முழுவதும் பெண்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் முதல் ரெயில் நிலையம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

உலகம்

உலகின் மிகவும் மாசுபட்ட 20 நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் 3 நகரங்கள்

 • உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வின்படி உலகின் பெருநகரங்களாகிய பெய்ஜிங் மற்றும் புது டில்லியை தூக்கி சாப்பிடும் அளவிற்கு ஈரான் நாட்டின் ஒரு நகரம் அதிக மாசுபாட்டுடன் இருப்பதாக தெரிவித்துள்ளது.
 • உலக சுகாதார அமைப்பின்  (WHO)  PM2.5 தரவைப் பார்த்தால், ஈரானிய நகரமான ஷபோல் முதலிடம் பிடித்துள்ளது.
 • இந்தியாவின் குவாலியர் மற்றும் அலஹாபாத் ஆகிய இரு நகரங்களும் இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது, சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாட் நான்காவது இடத்தில் உள்ளது.
 • புது தில்லி 11வது இடத்திலும், சீன தலைனகர் பெய்ஜிங் 57வது இடத்திலும் உள்ளது.

வணிகம்

ரோட்டோமேக் நிறுவன வங்கி மோசடி: 11 வங்கி கணக்குகளை பறிமுதல் செய்தது வருமான வரித்துறை

 • ரோட்டோமேக் நிறுவனம் மீது வரி ஏய்ப்பு தொடர்பாக வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கு
 • ழுமத்தின் 11 வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சீனாவை விட தொழில்துறையில் இந்தியா முன்னேற்றம்: அமெரிக்க அதிபரின் மூத்த மகன் ஜூனியர் ட்ரம்ப் கருத்து

 • அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மூத்த மகன் டொனால்டு ட்ரம்ப் ஜூனியர் தனிப்பட்ட பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார்.
 • புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகையில், சீனாவுடன் ஒப்பிடுகையில் இந்தியா தொழில்துறையில் வேகமாக வளர்ந்து வருகிறது. ஆசிய அளவில் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரமான இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் முதலீட்டுக்கு ஏற்ற வகையில் உள்ளன என்றும் கூறினார்.

விளையாட்டு

ஒரு நாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் 900 புள்ளிகளை கடந்து விராட் கோலி சாதனை

 • ஒரு நாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி 900 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளார்.
 • பவுலர்களின் வரிசையில் இந்தியாவின் பும்ரா, ஆப்கானிஸ்தானின் ரஷித்கான் கூட்டாக முதலிடத்தை பிடித்துள்ளனர்.
 • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் ஒரு நாள் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

முத்தரப்பு டி20 தொடரை வென்று ஆஸி. சாம்பியன்: இறுதிப் போட்டியில் நியூஸியை வீழ்த்தியது

 • ஆக்லாந்து, ஈடன்பார்க்கில் 22.01.2018 நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடர் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியை டக்வொர்த் லூயிஸ் முறையில் 19 ரன்களில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!