TN TET தேர்வு குறித்த பயம் இனி இல்லை – நாளை (ஜூலை 29) மாதிரி தேர்வு அறிவிப்பு!

0
TN TET தேர்வு குறித்த பயம் இனி இல்லை - நாளை (ஜூலை 29) மாதிரி தேர்வு அறிவிப்பு!
TN TET தேர்வு குறித்த பயம் இனி இல்லை - நாளை (ஜூலை 29) மாதிரி தேர்வு அறிவிப்பு!
TN TET தேர்வு குறித்த பயம் இனி இல்லை – நாளை (ஜூலை 29) மாதிரி தேர்வு அறிவிப்பு!

நீங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) நடத்தும் தகுதித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருப்பவரா? தேர்வை குறித்து ஏதேனும் சந்தேகம் அல்லது மாதிரி தேர்வுகள் மூலம் பயிற்சி பெற நினைப்பவரா? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான். இப்பதிவில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்களது EXAMS DAILY வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அதைக்குறித்து இப்பதிவில் முழுமையாக தெரிந்து கொண்டு பயன் பெறுங்கள்.

TN TET மாதிரி தேர்வு:

தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் நியமனத்திற்கு ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுகளை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. மத்திய அரசின் சட்டப்படி, ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், இரண்டு முறை டெட் தேர்வை மாநில அரசுகள் நடத்த வேண்டும். ஆனால் கடைசியாக 2019ம் ஆண்டு டெட் தேர்வு நடத்தப்பட்டதை அடுத்து கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக 2020, 2021ம் ஆண்டுகளில் தேர்வு நடத்தப்படவில்லை. தற்போது, கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துள்ளதால் நடப்பு ஆண்டுக்கான டெட் தேர்வுக்கு, ஆன்லைன் வழியே மார்ச் 14 முதல் ஏப் 13 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதுவரை டெட் தேர்விற்கு தமிழகம் முழுவதும் ஆறு லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

இந்த தகுதித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு உதவும் வகையில் எங்களது Exams Daily வலைத்தளமானது மாதிரி தேர்வுகளை தினமும் நடத்தி வருகிறது. இதுவரை பல ஆயிரம் தேர்வர்கள் எங்களது வலைத்தளம் நடத்தி வரும் இந்த மாதிரி தேர்வுகளின் மூலம் பயனடைந்துள்ளார்கள் என்பதை தெரிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம். மேலும், நாளை (29.07.2022) எங்கள் Exams Daily வலைத்தளம் TET – General Tamil & General English 09 தேர்வுக்கான மாதிரி தேர்வை நடத்த உள்ளது. இதில் நீங்கள் இணைந்து பயன்பெற நினைத்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பயனடையலாம். இந்த லிங்க் நாளை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!