தமிழகத்தில் குரங்கு அம்மை தொற்று குறித்த அச்சம் – அமைச்சர் விளக்கம்!

0
தமிழகத்தில் குரங்கு அம்மை தொற்று குறித்த அச்சம் - அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் குரங்கு அம்மை தொற்று குறித்த அச்சம் - அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் குரங்கு அம்மை தொற்று குறித்த அச்சம் – அமைச்சர் விளக்கம்!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் குரங்கு அம்மை நோய்த் தொற்று இந்தியாவில் பல மாநிலங்களில் பரவத் தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் அந்த பாதிப்பு இல்லை எனவும், அவ்வாறு தொற்று கண்டுபிடிக்கப்பட்டால் உடனே தெரிவிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்

குரங்கு அம்மை தொற்று:

அமெரிக்கா, ஆப்பிரிக்கா நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் குரங்கு அம்மை நோய்த் தொற்று பரவத் தொடங்கி இருக்கிறது. மேலும் கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இந்த நோய்த் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் இந்த நோய்த் தொற்று பரவ அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் ஒன்றை அளித்து இருக்கிறார்.

Exams Daily Mobile App Download

அதில் குரங்கு அம்மை நோய்த்தடுப்பு நடவடிக்கையாக வெளிநாட்டில் இருந்து தமிழகம் வருவோருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னை, திருச்சி , மதுரை, கோவை போன்ற பன்னாட்டு விமான நிலையங்களில் குரங்கு அம்மை தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனையிலும் 10 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அவர்களுக்கு குரங்கு அம்மை நோய் ஏற்பட்டால் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மருத்துவ வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Common Wealth 2022: கானா குத்துச்சண்டை வீரர் இடைநீக்கம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தமிழ்நாட்டில் இதுவரை குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்படவில்லை. அவ்வாறு பரிசோதனை செய்யப்படுபவர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் உடனே அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். குரங்கு அம்மை குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, கோவை, திருச்சி, மதுரை மாவட்டங்களில் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன என மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here