வங்கி & தபால் திட்ட வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – FD விகிதம் உயர்வு!

0
வங்கி & தபால் திட்ட வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - FD விகிதம் உயர்வு!
வங்கி & தபால் திட்ட வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - FD விகிதம் உயர்வு!
வங்கி & தபால் திட்ட வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – FD விகிதம் உயர்வு!

ரிசர்வ் வங்கி வட்டிகளுக்கான ரெப்போ விகிதமாக உயர்த்தியதனால் அனைத்து வங்கிகளும் FD விகிதங்களை உயர்த்தி விட்டது. இந்நிலையில், வங்கி மற்றும் தபால் அலுவலகத்தில் உயர்த்தப்பட்டுள்ள FD விகிதங்கள் அனைத்தும் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.

FD விகிதம்

வாடிக்கையாளர்கள் பலரும் வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் நிலையான வருடாந்திர வட்டியை பெறுவதற்கு நிலையான வைப்பு கணக்கை திறந்து வைத்துள்ளனர். இந்திய ரிசர்வ் வங்கி வட்டிகளுக்கான ரெப்போ விகிதமாக உயர்த்தியதை தொடர்ந்து அனைத்து வங்கிகளும் நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்திவிட்டன. மேலும், இந்த நிலையான வைப்பு தொகையை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இது மட்டுமல்லாமல் வங்கிகளில் நிலையான வைப்பு தொகைக்கு 5 லட்சம் வரையில் காப்பீட்டு உத்தரவாதமும் இருக்கிறது.

தற்போது SBI வங்கியின் நிலையான வைப்பு தொகை வட்டி விகிதங்கள், HDFC வங்கியின் FD விகிதங்கள் மற்றும் தபால் அலுவலக டெபாசிட்களுடன் ஒப்பிட்டு பார்க்கலாம். அதாவது, SBI வங்கியின் புதிய நிலையான வைப்பு தொகை விகிதங்கள் கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதாவது, SBI வங்கி 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான நிலையான வைப்புத்தொகைகளுக்கு பொது மக்களுக்கு 2.90 சதவீதம் முதல் 5.65 சதவீதம் வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 3.40 சதவீதம் முதல் 6.45 சதவீதம் வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது. முதலில், 7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான நிலையான வைப்புத்தொகைகளுக்கு பொது மக்களுக்கு 2.90 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 3.40 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.

அடுத்ததாக 46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான நிலையான வைப்புத்தொகைகளுக்கு பொது மக்களுக்கு 3.90 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 4.40 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையிலான நிலையான வைப்பு தொகைகளுக்கு பொது மக்களுக்கு 4.55 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 5.05 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 211 நாட்கள் முதல் 1 ஆண்டு வரையிலான நிலையான வைப்புத்தொகைகளுக்கு பொது மக்களுக்கு 4.6 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 5.1 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு துறைகளில் உள்ள 3.5 லட்சம் காலிப்பணியிடங்கள்? முக்கிய தகவல் வெளியீடு!

அடுத்ததாக 1ஆண்டு முதல் 2 ஆண்டு வரையிலான நிலையான வைப்புத்தொகைகளுக்கு பொது மக்களுக்கு 5.45 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 5.95 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 2 ஆண்டு முதல் 3 ஆண்டு வரையிலான நிலையான வைப்புத்தொகைகளுக்கு பொது மக்களுக்கு 5.5 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 6.0 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 3 ஆண்டு முதல் 5 ஆண்டு வரையிலான நிலையான வைப்புத்தொகைகளுக்கு பொது மக்களுக்கு 5.6 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 6.1 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 5 ஆண்டு முதல் 10 ஆண்டு வரையிலான நிலையான வைப்புத்தொகைகளுக்கு பொது மக்களுக்கு 5.65 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 6.45 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது HDFC வங்கி உயர்த்தியுள்ள FD விகிதங்களை பற்றி பார்க்கலாம். முதலில், 7 நாட்கள் முதல் 29 நாட்கள் வரையிலான நிலையான வைப்புத்தொகைகளுக்கு பொது மக்களுக்கு 2.75 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 3.35 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்ததாக 30 நாட்கள் முதல் 89 நாட்கள் வரையிலான நிலையான வைப்புத்தொகைகளுக்கு பொது மக்களுக்கு 3.25 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 3.75 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 90 நாட்கள் முதல் 6 மாதம் வரையிலான நிலையான வைப்புத்தொகைகளுக்கு பொது மக்களுக்கு 3.75 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 4.25 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 6 மாதம் முதல் 1 ஆண்டு வரையிலான நிலையான வைப்புத்தொகைகளுக்கு பொது மக்களுக்கு 4.65 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 5.15 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.

அடுத்ததாக 1 ஆண்டு முதல் 3 ஆண்டு வரையிலான நிலையான வைப்புத்தொகைகளுக்கு பொது மக்களுக்கு 5.50 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 6.00 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 3 ஆண்டு முதல் 5 ஆண்டு வரையிலான நிலையான வைப்புத்தொகைகளுக்கு பொது மக்களுக்கு 6.10 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 6.60 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 5 ஆண்டு முதல் 10 ஆண்டு வரையிலான நிலையான வைப்புத்தொகைகளுக்கு பொது மக்களுக்கு 5.75 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 6.50 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!