HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – FD வட்டி விகிதம் மாற்றம்!

0
HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - FD வட்டி விகிதம் மாற்றம்!
HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - FD வட்டி விகிதம் மாற்றம்!
HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – FD வட்டி விகிதம் மாற்றம்!

இந்தியாவின் முன்னணி வங்கித்துறை நிறுவனங்களில் ஒன்றான HDFC, வாடிக்கையாளர்களின் நிலையான வைப்புத்தொகைக்கான (FD) வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இது குறித்த கூடுதல் கட்டண விவரங்களை இப்பதிவில் காணலாம்.

வட்டி விகிதம்

வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதில் ஆர்வம் செலுத்தி வரும் HDFC வங்கி தற்போது சில முக்கிய மாற்றங்களை அறிவித்திருக்கிறது. அந்த வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தவணைக்காலங்களுக்கான நிலையான வைப்புத்தொகை (FD) வட்டி விகிதங்களை HDFC வங்கி அதிகரித்துள்ளது. இந்த நிலையான வைப்புத்தொகைகளுக்கான (FD) புதிய வட்டி விகிதம் டிசம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – தமாகா முக்கிய கோரிக்கை!

இது தொடர்பாக HDFC வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, தேர்ந்தெடுக்கப்பட்ட தவணைக்காலங்களில் HDFC வங்கி 10 அடிப்படை புள்ளிகள் (bps) வரை வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. இருப்பினும், மூத்த குடிமக்கள் கூடுதல் வட்டி விகிதம் அல்லது மற்றவர்களை விட 50 அடிப்படை புள்ளிகள் அளவுக்கு அதிக வட்டி விகிதங்களைப் பெறுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது சமீபத்திய திருத்தத்தின்படி, HDFC வங்கி ஒரு வருடம் மற்றும் இரண்டு ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் FDகளுக்கான வட்டி விகிதங்களை பத்து அடிப்படை புள்ளிகள் (bps) உயர்த்தியுள்ளது.

இந்த வைப்புத்தொகைகளுக்கு இப்போது 5 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும். தவிர பொது மக்களுக்கான FD வட்டி விகிதம் 2.50 சதவிகிதம் முதல் 5.50 சதவிகிதம் வரை அதன் காலத்தைப் பொறுத்து இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஒவ்வொரு காலத்திற்கும் உரிய மாற்றப்பட்ட வட்டி விகிதங்களை விரிவாக காணலாம். அந்த வகையில்,

  • 7 – 14 நாட்கள் – 2.50%
  • 15 – 29 நாட்கள் – 2.50%
  • 30 – 45 நாட்கள் – 3%
  • 61- 90 நாட்கள் – 3%
  • 91 நாட்கள் – 6 மாதங்கள் 3.5%
  • 6 மாதங்கள் 1 நாள் – 9 மாதங்கள் 4.4%
  • 9 மாதங்கள் 1 நாள் 4.4%
  • 1 ஆண்டு 4.9%
  • 1 வருடம் 1 நாள் – 2 ஆண்டுகள் 5%
  • 2 ஆண்டுகள் 1 நாள் – 3 ஆண்டுகள் 5.15%
  • 3 ஆண்டு 1 நாள் – 5 ஆண்டுகள் 5.35%
  • 5 ஆண்டுகள் 1 நாள் – 10 ஆண்டுகள் 5.50%
HDFC வங்கியின் மூத்த குடிமக்களுக்காக சமீபத்திய FD வட்டி விகிதங்கள்:
  • FD வட்டி விகிதங்களில் திருத்தம் செய்யப்பட்ட பிறகும், மூத்த குடிமக்கள் பொது மக்களை விட 50 அடிப்படை புள்ளிகள் அதிக வட்டி விகிதங்களை பெறுவார்கள்.
  • HDFC வங்கி 7 நாட்கள் முதல் 29 நாட்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 3 சதவீத வட்டி விகிதத்தையும், 30 முதல் 90 நாட்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 3.5 சதவீதத்தையும் வழங்குகிறது.
  • மேலும் 91 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரை 4 சதவீதம் மற்றும் 6 மாதங்கள் 1 நாள் முதல் ஒரு வருடத்திற்கு குறைவான காலத்தில் 4.9 சதவீதம் வரையும் வழங்கப்படுகிறது.
  • இதற்கிடையில், இவ்வங்கி ஒரு வருடத்தில் முதிர்ச்சியடையும் FD களுக்கு 5.4 சதவீதத்தை வழங்குகிறது.
  • இதேபோல், 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான முதிர்வு காலத்துடன் கூடிய டெபாசிட்களுக்கு 6.25 சதவீத வட்டி கொடுக்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!