SBI & HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – FD வட்டி விகிதம் உயர்வு! முழு விவரங்கள் இதோ!

0
SBI & HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் - FD வட்டி விகிதம் உயர்வு! முழு விவரங்கள் இதோ!
SBI & HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் - FD வட்டி விகிதம் உயர்வு! முழு விவரங்கள் இதோ!
SBI & HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – FD வட்டி விகிதம் உயர்வு! முழு விவரங்கள் இதோ!

சமீபத்தில் இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கி நிறுவனங்களான SBI மற்றும் HDFC ஆகியவை தங்களது வாடிக்கையாளர்களின் நிலையான வைப்பு கணக்கு வட்டி விகிதத்தை மாற்றியுள்ளது. இப்போது திருத்தப்பட்ட வட்டி விகிதங்களின் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

வட்டி விகிதம்

வாடிக்கையாளர்களுக்கான சிறந்த சேவைகளை வழங்குவதில் ஆர்வம் செலுத்தி வரும் முன்னணி பொதுத்துறை வங்கி நிறுவனங்களான SBI மற்றும் HDFC ஆகியவை கடந்த நாட்களில் நிலையான வைப்பு கணக்குகளுக்கான (FD) வட்டி விகிதங்களை மாற்றியுள்ளது. இதற்கு முன்னதாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI), பிப்ரவரி 10 அன்று ரெப்போ ரேட் மற்றும் ரிசர்வ் ரெப்போ விகிதங்களை மாற்றாமல் வைத்திருந்த சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்புகள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

CBSE 10 & 12ம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு – பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது?

ஏற்கனவே இந்தியாவின் முக்கியமான இரண்டு வங்கி நிறுவனங்களான SBI மற்றும் HDFC ஆகியவை தங்களது சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை திருத்தியது. இந்த செயல்முறைகளும் இந்த மாதம் முதல் அமலுக்கு வந்திருந்தது. இதனை தொடர்ந்து மீண்டுமாக HDFC மற்றும் SBI வங்கியின் FD வட்டி விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இப்போது திருத்தப்பட்ட புதிய வட்டி விகிதங்கள் பிப்ரவரி 14 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது கவனிக்கத்தக்கது.

HDFC வங்கிக்கான திருத்தப்பட்ட FD வட்டி விகிதங்கள்:

  • 7-14 நாட்கள், 15-29 நாட்கள் – 2.5%
  • 30-45 நாட்கள், 46-60 நாட்கள், 61-90 நாட்கள் – 3%
  • 91 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரை – 3.5%
  • 6 மாதங்கள் 1 நாள் முதல் 9 மாதங்கள் வரை – 4.4%
  • 9 மாதங்கள் 1 நாள் முதல் ஒரு வருடத்திற்கும் குறைவானது – 4.4%
  • 1 வருடம் 1 நாள் முதல் 2 ஆண்டுகள் வரை – 5%
  • 2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரை – 5.2%
  • 3 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரை – 5.45%
  • 5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை – 5.6%

எஸ்பிஐக்கான திருத்தப்பட்ட FD வட்டி விகிதங்கள்:

  • 7-45 நாட்கள் – 2.9%
  • 46-179 நாட்கள் – 3.9%
  • 180-210 நாட்கள், 211 நாட்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவானது – 4.4%
  • 1 வருடம் முதல் 2 வருடங்களுக்கும் குறைவானது – 5.1%
  • 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை – 5.2%
  • 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை – 5.45%
  • 5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் வரை – 5.5%

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!