மூத்த குடிமக்களுக்கு 8% க்கும் மேல் FD வட்டி விகிதம் – முழு விவரம் இதோ!

0
மூத்த குடிமக்களுக்கு 8% க்கும் மேல் FD வட்டி விகிதம் - முழு விவரம் இதோ!
மூத்த குடிமக்களுக்கு 8% க்கும் மேல் FD வட்டி விகிதம் - முழு விவரம் இதோ!
மூத்த குடிமக்களுக்கு 8% க்கும் மேல் FD வட்டி விகிதம் – முழு விவரம் இதோ!

பணவீக்கம் காரணமாக பங்குச்சந்தைகள் முதலீடுகள் நிலையற்ற தன்மையாக மாறியுள்ளதால், முதலீட்டாளர்கள் அதிக வருமானம் தரும் பாதுகாப்பான முதலீடுகளை தேடி வருகின்றனர். வங்கி பிக்சட் டெபாசிட்கள் பணத்தைச் சேமிப்பதற்கு மட்டுமின்றி அதிக வட்டிகளைப் பெறுவதற்கும் ஒரு சிறந்த வழியாகும். இந்நிலையில் மூத்த குடிமக்களுக்கு 8%க்கும் மேல் FD வட்டி விகிதத்தை வழங்கும் வங்கிகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

FD வட்டி விகிதம்:

மே 2022 இல் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) முக்கிய கொள்கை விகிதங்களை உயர்த்தத் தொடங்கியதிலிருந்து, வங்கிகள் நிலையான வைப்புத் தொகைக்கான (எஃப்டி) வட்டி விகிதங்களை அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் சில்லறை பணவீக்கம் ஜூன் மாதத்தில் 7.01% ஆகவும், மார்ச் மாதத்தில் 6.95% ஆகவும் இருந்து ஜூலை 2022 இல் நான்கு மாதங்களில் இல்லாத 6.71% ஆகக் குறைந்துள்ளது. வங்கி வட்டி விகித உயர்வுகளுக்கு மத்தியில், பல வங்கிகள் இப்போது மூத்த குடிமக்கள் அல்லாத மற்றும் மூத்த குடிமக்களுக்கு சில வங்கிகள் வட்டி விகிதங்களை மிகவும் உயர்த்தியுள்ளன. அந்த வகையில் மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் 8% வரை உயர்ந்துள்ளது. இருப்பினும் எஸ்.பி.ஐ, ஐசிஐசிஐ வங்கி, மற்றும் HDFC போன்ற வங்கிகள் 6.45 சதவீதம், 6.60 சதவீதம் மற்றும் 6.60 சதவீதம் என்ற அதிகபட்ச வட்டி விகிதங்களை வழங்குகின்றன.

ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி: இந்த வங்கியின் மிக சமீபத்திய நிலையான வைப்பு வட்டி விகிதங்கள் ஜூன் 15, 2022 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. ஜன ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 3.30 சதவீதம் முதல் 8.15 சதவீதம் வரை வட்டி விகிதத்தை 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை வழங்குகிறது. 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான காலக்கட்டத்தில் 8.15 சதவீதம் அதிக வட்டி விகிதத்தை வங்கி வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு, வங்கி 1 முதல் 3 ஆண்டுகள் வரை 8.05 சதவீதத்தை வழங்குகிறது. வங்கியின் கூற்றுப்படி, “ஒரு வருடத்தில் உள்ள நாட்களின் உண்மையான எண்ணிக்கையின் அடிப்படையில் வட்டி கணக்கிடப்படுகிறது, அதாவது லீப் ஆண்டுக்கு 365 நாட்கள் மற்றும் ஒரு லீப் ஆண்டுக்கு 366 நாட்கள். வைப்புத்தொகையின் காலம் நாட்களின் எண்ணிக்கையில் கணக்கிடப்படுகிறது.

தமிழகத்தில் நாளை மறுநாள் (ஆக.26) ‘இந்த’ இடங்களில் மின்தடை – மின்வாரியம் அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி: ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (SFB) ரூ.2 கோடிக்கு கீழ் உள்ள நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அதிக வட்டி விகிதங்கள் ஆகஸ்ட் 21, 2022 முதல் அமலுக்கு வரும். திருத்தத்தைத் தொடர்ந்து, 1000 நாட்களில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு பொது மக்களுக்கு அதிகபட்சமாக 8% வட்டி விகிதத்தை வங்கி வழங்குகிறது.

Suryoday Small Finance வங்கி : மூத்த குடிமக்களுக்கு 999 நாட்களில் முதிர்ச்சியடையும் டெர்ம் டெபாசிட்டுகளுக்கு 7.99% என்ற அதிகபட்ச வட்டி விகிதத்தை வங்கி வழங்குகிறது, இது 8%க்கு மிக அருகில் உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!