‘பாரதி கண்ணம்மா’ சீரியல் வில்லி வெண்பாவிற்கு பிடித்தமான டிஷ் – எப்படி செய்வது?

0
'பாரதி கண்ணம்மா' சீரியல் வில்லி வெண்பாவிற்கு பிடித்தமான டிஷ் - எப்படி செய்வது?
'பாரதி கண்ணம்மா' சீரியல் வில்லி வெண்பாவிற்கு பிடித்தமான டிஷ் - எப்படி செய்வது?
‘பாரதி கண்ணம்மா’ சீரியல் வில்லி வெண்பாவிற்கு பிடித்தமான டிஷ் – எப்படி செய்வது?

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் வில்லி வெண்பாவாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை பரீனா. இவர் முதலில் சமையல் நிகழ்ச்சி மூலமாக தான் சின்னத்திரைக்குள் அறிமுகமானார். இந்நிலையில் அவருக்கு பிடித்தமான சாப்பாடு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நடிகை பரீனா:

பாரதி கண்ணம்மா சின்னத்திரை சீரியல் வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. இந்த சீரியலில் வெண்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பவர் பரீனா. சின்னத்திரை டாப் லிஸ்ட் வில்லிகளில் முதலிடத்தில் இருப்பவரும் பரீனா தான். இந்நிலையில் அவர் விஜய் டிவி சீரியலுக்கு முன்னதாக சன் டிவி-யில் ஒளிபரப்பான ‘கிச்சன் கலாட்டா’ சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். மேலும் புதுயுகம் டிவியிலும் உணவு சார்ந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

சன் டிவி “கண்ணான கண்ணே” சீரியலில் களமிறங்கும் பிக்பாஸ் நடிகை – வைரலாகும் புகைப்படம்!!

ஜீ தமிழில் ‘அஞ்சறைப் பெட்டி’ என்கிற சமையல் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி அதன் மூலம் பிரபலமடைந்தார். இதற்கு காரணம் பரீனாவிற்கு சமையல் என்றால் மிகவும் பிடிக்குமாம். சமையல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியது மூலமாக பல புதிய உணவுகளை சமைக்க கற்றுக் கொண்டாராம். அதன் பின் சீரியலுக்குள் வந்த பின்னர் சமைப்பது இல்லையாம். இவருக்கு பிடித்தமான உணவு சிக்கன் என தெரிவித்துள்ளார். அவரது வீட்டில் அடிக்கடி சிக்கன் செய்து அசத்துவாராம்.

பாரதி கண்ணம்மாவை பின்னுக்கு தள்ளி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதலிடம் – 38வது வார TRP ரேட்டிங்!

மேலும் அவருக்கு பிடித்தமான சிக்கன் ரெசிபியை எப்படி செய்வது என பகிர்ந்துள்ளார். அதில், தேவையான பொருட்கள் என்றால் சிக்கன், வெங்காயம், கறிவேப்பிலை, பெப்பர் தூள், இஞ்சி பூண்டு விழுது. முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்பு அதில் சிக்கன் சேர்த்து உப்பு, பெப்பர் தூள் தூவி எண்ணெயில் அப்படியே வறுக்க வேண்டும். எண்ணெய் தனியாக பிரியும் வரை சிக்கனை கடாயில் வறுத்து எடுத்து இறக்கினால் சுவையான குயிக்கான சிக்கன் டிஷ் ரெடி. இதை சாம்பார் சாதத்திற்கு வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும் என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!