கலர்ஸ் தமிழ் ‘அம்மன்’ சீரியலில் களமிறங்கும் பிரபல நடிகை – அவரே வெளியிட்ட பதிவு!
கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் அம்மன் சீரியலில் புதிதாக நடிகை தீபா களமிறங்கி உள்ளதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகை தீபா:
தமிழ் சின்னத்திரையில் ரெக்க கட்டி பறக்குது மனசு, பகல் நிலவு, நாம் இருவர் நமக்கு இருவர், ஆண்டாள் அழகர் உள்ளிட்ட பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை தீபா. அவர் தற்போது கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் அம்மன் சீரியலில் பாசிட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். சின்னத்திரை சீரியல்களில் பல கதாபாத்திரங்களில் இவர் நடித்தாலும் தற்போது பக்தி சீரியலில் முதன் முறையாக நடிக்கிறார்.
பிரபல சீரியல் நடிகரை கரம் பிடிக்கும் சன் டிவி நடிகை சந்திரா – குவியும் வாழ்த்துக்கள்!
கலர்ஸ் தமிழ் சேனலில் அம்மன் சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. அதில் சக்தி என்ற முக்கிய கேரக்டரில் பவித்ரா கவுடா மற்றும் ஈஸ்வர் என்ற கேரக்டரில் நடிகர் அமல்ஜித், ஷாரதாவாக ஜெனிபர், தாமோதரனாக ஹரிஷங்கர் நாராயணன், மந்த்ராவாக நடிகை சந்திரிகா, காந்தாரியாக சுபா ரக்ஷா என முக்கிய கதாபாத்திரங்களில் பலர் நடித்து வருகின்றனர்.
TN Job “FB
Group” Join Now
இந்நிலையில் மாங்கல்ய சந்தோஷம் மற்றும் அம்மன் ஆகிய 2 சீரியல்களின் மகாசங்கமம் இரவு 7 மணி முதல் 8.30 வரை தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த மகாசங்கமத்தில் தான் சீரியல் நடிகை தீபா இணைந்துள்ளதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த சீரியல் படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட அவர் என்னை இரவு 7 மணி முதல் இரவு 8.30 மணி வரை கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் அம்மன் சீரியல் குடும்பத்தில் பார்க்கலாம். மறக்காமல் பார்த்து எங்களை சப்போர்ட் செய்ய வேண்டும். உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்கள் மற்றும் வாழ்த்துக்கள் எனக்கு தேவை என குறிப்பிட்டுள்ளார்.