வண்டிகளில் FASTag பயன்படுத்துவோர் கவனத்திற்கு.. இனி பேலன்ஸ் பார்ப்பதும், ரீசார்ஜ் செய்வதும் சுலபமே – முழு விவரம் இதோ!

0
வண்டிகளில் FASTag பயன்படுத்துவோர் கவனத்திற்கு.. இனி பேலன்ஸ் பார்ப்பதும், ரீசார்ஜ் செய்வதும் சுலபமே - முழு விவரம் இதோ!
வண்டிகளில் FASTag பயன்படுத்துவோர் கவனத்திற்கு.. இனி பேலன்ஸ் பார்ப்பதும், ரீசார்ஜ் செய்வதும் சுலபமே - முழு விவரம் இதோ!
வண்டிகளில் FASTag பயன்படுத்துவோர் கவனத்திற்கு.. இனி பேலன்ஸ் பார்ப்பதும், ரீசார்ஜ் செய்வதும் சுலபமே – முழு விவரம் இதோ!

இந்தியாவில் உள்ள நெடுஞ்சாலைகளில் பயணம் செய்ய சுங்கச் சாவடிகளில் ஃபாஸ்டாக் மூலம் கட்டணம் செலுத்த வேண்டும். ஃபாஸ்டாக் பேலன்ஸ் பார்ப்பது, ரீசார்ஜ் செய்வது போன்றவற்றை எளிமையாக எப்படி செய்யலாம் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

ஃபாஸ்டாக் விவரங்கள்

இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்ய இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஃபாஸ்டாக் மூலம் நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கிறது. அந்த வகையில் இந்த ஃபாஸ்டாக் அரசு அங்கீகரித்த ‘டேக்-வழங்குபவர்கள்’ அல்லது வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஃபாஸ்டாக் பயன்படுத்த ரூ.100 குறைந்தபட்சமாக ரீசார்ஜ் செய்ய வேண்டும், மேலும் அதிகபட்ச தொகை என்ன வாகனம் மற்றும் ஃபாஸ்டாக் சேவையுடன் இணைக்கப்பட்ட கணக்கை பொறுத்தது.

மேலும் ஃபாஸ்டாக் பயன்படுத்துவதில் வாகன ஓட்டிகளுக்கு ஏற்பட்ட சிக்கல்களில் ஒன்றாக ரீசார்ஜ் செய்வது இருந்தது. ஆனால் தற்போது அது எளிமையாகிவிட்டது. மேலும் ஃபாஸ்டாக் பேலன்ஸ் மற்றும் அதன் ரீசார்ஜ் குறித்த விவரங்களை பார்க்க பல வழிகள் இருக்கிறது. முதலில் ஃபாஸ்டாக் இணைக்கப்பட்ட வங்கி கணக்கின் இணையதளத்திற்கு சென்று ஃபாஸ்டாக் பேலன்ஸ் பார்க்கலாம். அது மட்டுமில்லாமல் Google Play Store அல்லது App Store இல் கிடைக்கும் My FASTag மொபைல் ஆப் மூலமாகவும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

HDB Financial-ல் சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

அது மட்டுமில்லாமல் ஃபாஸ்டாக் பேலன்ஸ் பார்க்க உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து +91-8884333331 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தும் தெரிந்து கொள்ளலாம். மேலும் Paytm, Gpay அல்லது PhonePe போன்ற டிஜிட்டல் கட்டண ஆப் பயன்படுத்தி ஃபாஸ்டாக் கணக்கில் ரீசார்ஜ் செய்யலாம்.

Follow our Instagram for more Latest Updates

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!