அதிவேக பந்துவீச்சாளர் மலிங்கா அனைத்து போட்டிகளில் இருந்தும் ஓய்வு – ரசிகர்கள் அதிர்ச்சி!

0
அதிவேக பந்துவீச்சாளர் மலிங்கா அனைத்து போட்டிகளில் இருந்தும் ஓய்வு - ரசிகர்கள் அதிர்ச்சி!
அதிவேக பந்துவீச்சாளர் மலிங்கா அனைத்து போட்டிகளில் இருந்தும் ஓய்வு - ரசிகர்கள் அதிர்ச்சி!
அதிவேக பந்துவீச்சாளர் மலிங்கா அனைத்து போட்டிகளில் இருந்தும் ஓய்வு – ரசிகர்கள் அதிர்ச்சி!

இலங்கையின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான லசித் மலிங்கா அனைத்து ரக கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

பந்துவீச்சாளர்:

இலங்கையின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான லசித் மலிங்கா கடந்த ஜனவரி மாதத்தில் அனைத்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெருவதாக அறிவித்திருந்தார். லசித் மலிங்கா ஒருநாள் போட்கள் மற்றும் 20 -20 போட்டிகளில் அணியின் தலைவராக முன்னர் பதவி வகித்தார். இவர் சிறப்பு அதிவேகப் பந்து வீச்சாளராக அணியில் இடம் பிடித்தவர். சர்வதேச 20 – 20 போட்டிகளில் அதிக இலக்குகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். 2014 ஐசிசி உலக 20 – 20 தொடரில் இவரின் தலைமையிலான இலங்கை அணி கோப்பையை வென்றது.

டெல்டா கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி – பள்ளிகள் வரிசையாக மூடல்!

இவர், கடந்த 17 வருடங்களாக தேசிய மற்றும் சர்வதேச போட்டிகள் ஊடாக தான் பெற்றுக் கொண்ட அனுபவம் மற்றும் அறிவு தொடர்ந்தும் தேவைப்படப்போவதில்லை என்று தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வ டிவீட்டர் தலத்தில் செய்தியினை வெளியிட்டுள்ளார். அதில், கிரிக்கெட் வாழ்வில் இறுதியாக இருந்த டி 20 போட்டிகளில் இருந்தும் தான் ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

TN Job “FB  Group” Join Now

மேலும், கிரிக்கெட் போட்டிக்கு ஆதரவு வழங்கும் முறையில் அறிமுக வீர்ரகளுடன் தனது அனுபவத்தை வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 84 சர்வதேச டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள மலிங்கா 107 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 122 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி 170 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், இத்தனை ஆண்டுகள் எனது பயணத்தில் உடன் இருந்த அனைவருக்கு நன்றிகள் என்றும், விளையாட்டின் மீதுள்ள எனது அன்பு ஒருபோதும் ஓய்வைத் தேடாது என்றும் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here