விரைவில் இலவச மின்சாரம் ரத்து? விவசாயிகள் சங்கத்தினர் அச்சம்!

0
விரைவில் இலவச மின்சாரம் ரத்து? விவசாயிகள் சங்கத்தினர் அச்சம்!
விரைவில் இலவச மின்சாரம் ரத்து? விவசாயிகள் சங்கத்தினர் அச்சம்!
விரைவில் இலவச மின்சாரம் ரத்து? விவசாயிகள் சங்கத்தினர் அச்சம்!

மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவால் தனியார் துறைக்கே அதிக பயன் என்றும், ஏழை மக்களுக்கு இதனால் பெரிய பாதிப்பு தான் என்று கருத்துக்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இவற்றின் காரணமாக விவசாயத்திற்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுமோ என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் உள்ளது என தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவது தொடர்பாக நடந்த மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினர் வருத்தம் தெரிவித்தனர்.

இலவச மின்சாரம்;

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரின் இறுதி நாளான ஆகஸ்ட் 8ம் தேதி லோக்சபாவில் மின்சார சட்ட திருத்த மசோதாவை மின்துறை அமைச்சர் ஆர்.கே. சிங் அறிமுகம் செய்தார். இந்த சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்வதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், தமிழகத்திற்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரத்திற்கு தடை ஏற்படலாம். இது போக, மின் கட்டணங்களை இனி தேசிய ஆணையமே முடிவு செய்யலாம்.

மேலும் தனியாருக்கு ஆதரவாக உள்ள இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவது தொடர்பாக நடந்த மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினர் வேதனை தெரிவித்தனர். மேலும் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சமீபத்தில் தெரிவித்தார். பிறகு இது தொடர்பான அறிக்கை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் காலை 10 மணிக்கு கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.

தமிழகத்தில் ஆகஸ்ட் 26ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

இதில், ஆணையத்தின் உறுப்பினர் வெங்கடேசன், செயலாளர் வீரமணி ஆகியோர் பங்கேற்றனர். அப்போது சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து மக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். குறிப்பாக குடியிருப்பு நலச்சங்க பிரதிநிதிகள், ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள், விவசாயிகள், இறால் மீன் பண்ணை உரிமையாளர்கள் என பலர் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். மேலும் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சண்முகம், உரிய காலத்தில் மின்துறையில் கட்டுமானப் பணிகளை முடிக்காததினால் 12,747 கோடி செலவு அதிகரித்துள்ளது என்று தெரிவிள்ளார். இதை பொதுமக்கள் தலையில் சுமத்துவது நியாயமில்லை.

மேலும் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் மாநில அமைப்பு செயலாளர் கந்தவேல், ‘கட்டண உயர்வால் விசைத்தறி, நூல், கார்மென்ட் போன்ற தொழில்கள் பாதிக்கப்படும். இந்த பிரிவில் 1.41 லட்சம் சர்வீஸ் உள்ளது. இதில் 14 ஆயிரம் பேர் 750 யூனிட்டுக்குள் தான் பயன்படுத்துகிறோம். எங்களுக்கு சோலார் எனர்ஜி வழங்க வேண்டும், குறிப்பாக, மானியம் வழங்க வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் செல்வா, கட்டாயம் 10% நிலக்கரி வெளிநாட்டில் இருந்து வாங்க வேண்டும் என நிர்பத்திக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 6% கட்டணம் உயர்த்தலாம் என்று கூறப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. மேலும் மின்சார கட்டண உயர்வு முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!